சென்னை மதுரவாயல் மன்னா.. இதோ டிசம்பருக்குள் 15 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம்.. மேயர் பிரியா
சென்னை: வரும் டிசம்பர் மாதத்திற்குள் மண்டலத்திற்கு ஒரு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையம் என்ற அடிப்படையில், 15 இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும், அதன்பின்னர் இன்னும் அதிக எண்ணிக்கையில் நாய்களுக்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை மேயர் பிரியா அதிரடியாக அறிவித்துள்ளார்.. சென்னையில் தினசரி 3 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வரும்நிலையில், வளர்ப்பு நாய்களை பொறுத்தவரையில் பதிவு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, அவைகளுக்கும் தடுப்பூசி முறையாக வழங்க வேண்டும் என்றும் மேயர் அறிவுறுத்தியிருக்கிறார்.
தெருநாய்களால் மட்டுமல்ல, பார்த்து பார்த்து பராமரித்து செல்லமாக வளர்க்கப்படும் வீட்டு நாய்களாலும் உயிரிழப்பு சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.. .

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் 60 வயது சப்போன் மன்னா.. இவர் சென்னை மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் பகுதியில் இரும்புக் கூடாரம் அமைத்து தங்கி கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
சென்னை மதுரவாயல் சம்பவம்
சம்பவத்தன்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் திடீரென சப்போன் மன்னாவின் காலில் கடித்துள்ளது. இதற்காக நாய்க் கடி ஊசிகளை மன்னா செலுத்திக் கொண்டார். எனினும், கடந்த சில நாட்களாக நெஞ்சு பகுதியில் வலி இருப்பதாக சப்போன் மன்னா தனது சக வடமாநில நண்பர்களிடம் சொல்லிய நிலையில், 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.. அவர்கள் மன்னாவை பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்..
அதேபோல கடந்த வாரம் சென்னை ஜாபா்கான்பேட்டை விஎஸ்எம் காா்டன் பகுதியில் கருணாகரன் என்பவரை பிட்புல் நாய் கடித்து குதறி உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டது.. இப்படி பிஞ்சுகள் முதல் முதியவர்கள் வரை நாய்க்கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
அரசு நடவடிக்கை
அதிலும், சிறுவர் சிறுமிகளை தெருநாய்கள் துரத்துவது, சூழ்ந்துகொண்டு கடிப்பது போன்ற சிசிடிவி வீடியோக்களும் வெளியாகி காண்போரை பதற வைத்து வருகிறது.. பொதுமக்களை இதுபோன்ற நாய்களிடமிருந்து காக்கும் பொருட்டு, காவல்துறை, நீதிமன்றங்கள் என அனைத்துமே சிரத்தை மேற்கொண்டு வருகின்றன.. நாய்க்கடி சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கையில் எடுத்துள்ளன,
அந்தவகையில், சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மாநகராட்சி மாமன்றத்திலும் எதிரொலித்தபடியே வருகிறது.
நேற்றைய தினம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் நடந்தது.
சென்னையில் நாய்கள் தொல்லை
அப்போது 61வது வார்டு கவுன்சிலர் பாத்திமா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) பேசும்போது, ''சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ள நிலையில். 27 சதவீதம் தெருநாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து நாய்களுக்கும் எப்போது முழுமையாக கருத்தடை செய்யப்படும்? என்று கேட்டார்.
இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், ''தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 3,000 தெரு நாய்களுக்கு ரேபிஸ் மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
டிசம்பருக்குள் நாய்கள் இன கருத்தடை மையம்
வரும் டிசம்பர் மாதத்திற்குள் 15 மண்டலங்களிலும் நாய்கள் இன கருத்தடை மையம் அமைக்கப்படும். அனைத்து தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும்" என்றார்.
இதையடுத்து, மாமன்ற கூட்டத்தில் 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. குறிப்பாக, மெரினா கடற்கரை சாலையில், உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியா அதிரடி அறிவிப்பு
சென்னையை பொறுத்தவரை, தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தெரு நாய்கள் தொடர்பாக 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் . அல்லது chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணைய தள பக்கத்திலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், டிசம்பர் மாதத்திற்குள் 15 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் பயன்பாட்டிற்கு வரும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications