கொளத்தூருக்கு விரைவில் இடைத் தேர்தல் வரப் போகுது.. எல்லோரும் ரெடியா இருங்க! அதிமுக மாஜி அட்வைஸ்!
சென்னை: ஒரே ஒரு மதம் இருக்க வேண்டுமென தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஒரு மதத்தை சார்ந்து அரசாங்கமே நடக்கிறது என மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது எனவும், கொளத்தூர் தொகுதிக்கு சீக்கிரத்தில் இடைத்தேர்தல் வரும் அனைவரும் தயாராக இருங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருமங்கலம் மோகன் தலைமையில் திருமங்கலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்,கட்சியின் செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்," ஒரே ஒரு மதம் இருக்க வேண்டும் என தற்போதைய ஆட்சி செயல்படுகிறது. சட்டமன்றத்தில் நிதியமைச்சர் நான் ஒரு கிறிஸ்தவன் என கூறுகிறார். கிறிஸ்தவம் எனக்கு அன்பின் மொழியை வழங்கியது என அமைச்சர் கூறுகிறார்.
அன்பின் மொழியை இந்து, இஸ்லாமிய மதம் வழங்கவில்லையா? ஒரு மதத்தை சார்ந்து அரசாங்கமே நடக்கிறது என மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா மூன்று மாதத்தில் ஒரு முறை கூட வில்லிவாக்கத்திற்கு வரவில்லை. விஜய் வந்தால் கூட்டம் கூடிவிடும் எனக் கூறுகின்றனர். எந்த கூட்டமும் கூட போவதில்லை இருந்தாலும் அவர் வில்லிவாக்கம் தொகுதிக்கு வரவில்லை என தெரிவித்தார். இன்னும் இரண்டே முக்கால் வருடத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரப் போகிறது.
இரண்டரை மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி முதலமைச்சராக வருவார் . அனைவரும் வெற்றி வெற்றி எனக் கூறுகின்றனர். நானும் வெற்றி என கூறி விட்டேன். கொளத்தூர் வில்லிவாக்கத்திற்கு சீக்கிரமே இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம். எனவே அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவில் அதிமுக ஆட்சி காலத்தில் 11 ஆயிரம் பேருக்கு டிக்கெட் வழங்கினோம். அனைவரும் பார்த்தனர்.
ஆனால் தற்பொழுது டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு அக்காட்சியின் பகுதி செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் விற்பனை செய்கிறார். ஆனால் முதலமைச்சர் ஊழல் இல்லாத ஆட்சி என கூறுகிறார். தாம்பரத்தில் முடிந்த பணிக்கு டெண்டர் வைத்து விடுகின்றனர். அது குறித்து கேள்வி எழுப்பினால் ஐஏஎஸ் அதிகாரியை மாற்றுகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி மட்டுமே மாற்றப்பட்ட அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை" என கூறினார்.


Click it and Unblock the Notifications
