இது மூன்றையும் இணைச்சிடுங்க.. ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்.. வெளியான முக்கிய அறிவுரை
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் செய்பவர்கள் ரூ.1000 பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சில அறிவுரைகள் வெளியாகி உள்ளன.

1. நீங்கள் குடும்பத்தலைவியாக இருக்க வேண்டும். அதாவது ரேஷன் கார்டில் தலைவன் என்ற லிஸ்டில் வருபவர்களின் மனைவியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பெண்கள் மட்டும் உள்ள வீட்டில், கணவர்கள் இல்லாத வீட்டில் மூத்த பெண்ணுக்கு பணம் வழங்கப்படும்.
2. உங்களின் வங்கி கணக்கு ஆதார் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். இது கண்டிப்பாக போன் நம்பருடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3. ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய முடியாது.
4. வருமான வரி செலுத்தக்கூடிய ஸ்லாப் கீழ் வருபவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய கூடாது.
5. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்படாது.
6. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.
7. கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும்.
8. அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது.
9. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.
10. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும்.
11. புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில் வழங்கப்படும்.
இப்போது இருக்கும் விதி என்ன?
இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.
மாறும் விதிகள்
மகளிர் உரிமை தொகை திட்டம் ஜூலை மாதம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின் புதிய பயனாளிகள் சேர்க்கப்படும் போது அதில் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து முக்கியமான பல தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த முறை சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.












Click it and Unblock the Notifications