மகளிர் உரிமைத்தொகை: வரும் 15ம் தேதி ரெடியா இருங்க! 1.48 லட்சம் புதிய அக்கவுண்டிற்கு வருகிறது ரூ.1000
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுடைய வங்கி கணக்கிற்கு இந்த மாதம் 15 ஆம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'ஆணுக்கிங்கே பெண் நிகர்' என்னும் சமத்துவப் பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக, மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

புதிய விண்ணப்பங்கள்: இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுரை 1.9 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக திருமணம் ஆனவர்கள் புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், விடுபட்ட பயனாளிகள், இதுவரை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக கூறப்பட்டது.
1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு: இதில் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தவர்களில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவிகிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுடைய வங்கி கணக்கிற்கு இந்த மாதம் 15 ஆம் தேதி 1,000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
15 ஆம் தேதி: முன்னதாக புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும், முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களுக்கும் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், . அவர்களுக்கும் இந்த முறை பணம் வழங்க திட்டமிடப்பட்டது. இதேபோன்று முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் மொத்தம் 1.48 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் வரும் 15 ஆம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர்களது போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை: ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பது ஆகும். பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தகுதிகள்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
* ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
* ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
* ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
* பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:
* குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாய விலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
பயன் பெறத் தகுதி இல்லாதவர்கள்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.
* ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
* குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
* ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
* மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
* சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
* ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
* ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.












Click it and Unblock the Notifications