Magalir urimai thogai: மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாமா? செங்கோட்டையன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத குடும்பத்தலைவிகள் மனுக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் நிலையில், இது குறித்த கேள்விக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ள சூழலில், உரிமைத்தொகை எப்போது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், செங்கோட்டையன் பேட்டியின் முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழக முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையிலும் என்ன நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக ஐந்தாண்டு திட்டம் என்ற முறையில் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே என்னென்ன திட்டங்கள் 5 ஆண்டுகள் வகுக்க வேண்டும் என்பதை திட்ட வடிவமாக துறையின் வாரியாக ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

Magalir urimai thogai Scheme Can Those Who Haven t Received the Benefit Apply Again Sengottaiyan Update

மனுக்கள் வாங்கியதும் தீர்வு காண முடியாது

விஜய்யின் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நல்லாட்சி தமிழகத்தில் மலர்ந்து இருக்கிறது. சந்திக்கின்ற அத்தனை பேரும் முதல்வர் விஜய்யை பார்த்த பிறகு இப்படிப்ப்பட்ட முதல்வரை நாங்கள் காணவில்லை என்று கூறுகிறார்கள்" என்றார்.

குதிரை பேரம் தொடர்பாக அதிமுக புகார் அளித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், "அதிமுகவினர் நெஞ்சில் கைவைத்து சொல்ல வேண்டும். 47 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு நாம் முதல்வர் ஆகலாம் என்று புதுவையில் பேசினாரா? இல்லையா? இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் தெளிவாக சொன்ன பிறகு அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இன்னைக்கு வந்து பொய் என்கிறார். வெளியே வந்த அனைவரும் சொல்கிறாகள்.

மனுக்கள் வாங்கிய உடனேயே தீர்வு காண முடியாது. ஒரு திருமணம் என்றாலே எவ்வளவு வேலைகள் இருக்கின்றன. அதேபோலத்தான் இது.. நிதிகள் வருகிற போது.. அதற்கான பணிகள் நடைபெறும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கடிதம் வந்த பிறகு முதல்வர் முடிவு செய்வார். 2006ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது மிகப்பெரிய தவறு என்று வைகோ சொல்லியது பற்றி கேட்கிறீர்கள். ஒவ்வொரு தலைவரும் அவர்களுடைய கருத்தை சொல்கிறார்கள். அதுபற்றி நான் கூறுவது சரியாக இருக்காது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500

அந்தந்த சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொருவரும் கூட்டணி வைப்பார்கள். அதில் ஆழமாக போய் நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் வாங்காமல் இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். அனைவருக்கும் தெரிகிறது.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். நேற்று கூட ஏறத்தாழ 187 மனுக்கள்.. பெண்களே நேரடியாக வந்து மகளிர் உரிமைத் தொகை வேண்டும் என்று மனு அளித்தனர். ஆன்லைன் வழியாக யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம். அதை அரசு பரிசீலித்து சரியாக இருக்குமேயானால் அதை தேர்வு செய்யப்படும்" என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகுமா?

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தவெக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் ரூ. 2,500 வழங்கப்படும் என்று கூறியிருந்தது. தற்போது தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் 2,500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் எழுந்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ரூ.2,500 பற்றி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்க்கபப்ட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+