ஸ்டாலினின் ரூ.5,000-த்தை வாங்க கூடாது.. தாயை அடித்த தவெக தொண்டர்.. பரவும் வீடியோ
சென்னை: மகளிர் உரிமைத்தொகையாக முதல்வர் ஸ்டாலி்ன வழங்கிய ரூ.5000 பணத்தை வாங்க கூடாது என்று பெற்ற தாயையே தாக்கியதாக தவெக தொண்டர் தாக்கியதாக கூறும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த இளைஞரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1.31 கோடி மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000யை தமிழக அரசு செலுத்தி வருகிறது. ஏழை பெண்கள், மூதாட்டிகளுக்கு இந்த பணம் பெரிய அளவில் உதவியாக உள்ளது.

இப்படியான சூழலில் தான் நேற்று முன்திமன் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்தை தமிழக அரசு வரவு வைத்தது. இது மகளிர் உரிமைத்தொகையை பெறும் மகளிருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலை காரணம் காட்டி இந்த தொகையை நிறுத்தப்படலாம் எனக்கூறி தமிழக அரசு முன்கூட்டியே இந்த தொகையை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளது. அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என்று தமிழக அரசு மகளிர் உரிமை தொகையை செலுத்தி உள்ளது.
இதனால் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். திமுகவின் கூட்டணி கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் இந்த செயல்பாட்டை வரவேற்றுள்ளனர். அதேவேளையில் அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் உள்பட பிற எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மகளிரின் ஓட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மகளிர் உரிமைத்தொகையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய ரூ.5,000யை வாங்க கூடாது என்று விஜயின் தவெக தொண்டர் தனது தாயை அடித்ததாக தெரிவித்துள்ளார். சேலத்தில் தவெகவின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தொண்டர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஆக்ரோஷமாக கூறும்போது, ‛‛நான் டிவிகே தான்.. அந்த காசு (மகளிர் உரிமைத்தொகையாக ஸ்டாலின் வழங்கிய ரூ.5000) வேண்டாம் என்று என் அம்மாவை அடித்துவிட்டு வந்தேன் ப்ரோ. அந்த காசு எனக்கு தேவையே இல்லை.. அந்த காசை வைத்து தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை'' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அந்த இளைஞரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அரசு வழங்கும் பணத்தை வாங்க கூடாது என்று சொந்த தாயையே அடித்துள்ளாரே என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications