சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தை விட 2 மடங்கு அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்ட உ.பி.! மகாராஷ்டிரா டாப்.. வேக்சின் டிராக்கர்

Google Oneindia Tamil News

சென்னை: மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

கொரோனா நோய் பரவலை ஒழிக்க தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதம் என்பது, உலக சுகாதார அமைப்பு மற்றும் அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒப்புக் கொண்ட விஷயம்.

கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

இந்தியாவைப் பொறுத்த அளவில் முன்கூட்டியே தடுப்பூசிகளை இறக்குமதி செய்யாத காரணமாக, தற்போது கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆரம்பத்தில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்தன.

தடுப்பூசி இல்லை

தடுப்பூசி இல்லை

இரண்டாவது அலை இந்தியாவை தாக்கியபோது 1 சதவீதம் பேர் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருந்தனர். இதுதான், பாதிப்பு மிக மோசமாக செல்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். ஆனால் முதல் டோஸ் போட்டு கொண்டவர்களுக்கு கூட இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

தடுப்பூசி டிராக்கர்

தடுப்பூசி டிராக்கர்

இந்த நிலையில்தான், அனைத்து மாநிலங்களிலும் எவ்வளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதில் முதல் டோஸ் எவ்வளவு, இரண்டாவது டோஸ் எவ்வளவு, நேற்று முன்தினம் வரை எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இப்போது எவ்வளவு செலுத்தப்பட்டுள்ளது, அதன் வித்தியாசம் என்ன என்பது பற்றிய முழு தகவல்கள் ஒன் இந்தியா டிராக் செய்து உங்களுக்கு வழங்குகிறது. இதை பற்றிய முழு தகவல் அறிய இங்கு கிளிக் செய்யவும்.


https://www.oneindia.com/covid-19-vaccine-tracker.html

 தமிழக நிலவரம்

தமிழக நிலவரம்

இந்த புள்ளிவிவரத்தின்படி பார்த்தால், தமிழகத்தில் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 30 ஆயிரத்து 848. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 191 பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 147. இதில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 527 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆகமொத்தம் தமிழகத்தில் இதுவரை 82 லட்சத்து 8 ஆயிரத்து 995 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவை சேர்ந்து இந்த தொகை வருகிறது.

விழிப்புணர்வு ஆரம்பம்

விழிப்புணர்வு ஆரம்பம்

இந்த புள்ளிவிவரத்தை வைத்து பார்த்தால் தமிழக மக்களிடையே இப்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது அல்லது இப்போதுதான் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கிராம அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது புரிகிறது. அதனால்தான், இந்த அளவுக்கு திடீரென அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 கர்நாடகா புள்ளி விவரம்

கர்நாடகா புள்ளி விவரம்

கர்நாடகாவில் ஏற்கனவே தமிழகத்தை விட அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1 கோடியே 28 லட்சத்து 21 ஆயிரத்து 613 பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 884. இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 69 ஆயிரத்து 729. நேற்று மட்டும் 18 ஆயிரத்து 399 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டு உள்ளனர். நேற்று முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 377.

பீகார் தடுப்பூசி அளவு

பீகார் தடுப்பூசி அளவு

பீகார் மாநிலத்தில் இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரத்து 193 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நேற்று மட்டும் முதல் டோஸ் போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 163. அங்கு மொத்தம் 83 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுள்ளனர். சுமார் 18 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுள்ளனர்.

நாட்டிலேயே டாப் மகாராஷ்டிரா

நாட்டிலேயே டாப் மகாராஷ்டிரா

நாட்டிலேயே அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்திய மாநிலம் மகாராஷ்டிரா. 2 கோடியே 16 லட்சத்து 39 ஆயிரத்து 736 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில், இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்து 58 ஆயிரத்து 657.

தமிழகத்தை விட உத்தர பிரதேசம் அதிகம்

தமிழகத்தை விட உத்தர பிரதேசம் அதிகம்

உத்தரபிரதேசத்தில் கூட மக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொண்டு இருக்கிறார்கள். அங்கு, 1 கோடியே 73 லட்சத்து 55 ஆயிரத்து மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்திற்கும் மேல். நேற்று மட்டும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் செலுத்தியுள்ளனர்.

குஜராத்

குஜராத்

குஜராத் மாநிலத்தில் இதுவரை 1 கோடியே 63 லட்சம் அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது டோஸ் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் மேல். நேற்று ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் குறைவான தடுப்பூசி

தமிழகத்தில் குறைவான தடுப்பூசி

மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலம், அதிகம் கல்வியறிவு கொண்ட மாநிலம் போன்ற சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் தமிழகத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாதது.. வதந்திகள் அதிக அளவு பரவியது.. உள்ளிட்டவை உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒப்பிட்டால் கூட பாதி அளவுக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதற்கான காரணம் என்று தெரிகிறது. அதேநேரம் தற்போது விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. மொத்தமாக தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மக்கள் மருத்துவமனைகளில் நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறார்கள். விரைவிலேயே பிற மாநிலங்களை தாண்டி சாதிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

English summary
Covid-19 vaccine tracker: Tamil Nadu's vaccinated percentage is very low compared to Uttar Pradesh, Maharashtra and some other North Indian states. Not enough awareness of corona vaccine is the main reason behind this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X