Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாத்மா காந்தி டூ ராகுல் காந்தி.. அரசியலை புரட்டிப் போட்ட யாத்திரைகள் எவை? எழுச்சிபெறுமா காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று யாத்திரையை தொடங்கும் நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய யாத்திரைகள் பற்றி காண்போம்.

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தொடர் போராட்டம் அக்கட்சியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

இந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்கவும், ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இன்று ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி.

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

இந்திய அரசியலில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை விட பாத யாத்திரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சுதந்திரத்துக்கு முன்பாக கடந்த 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில், ஆங்கிலேயர்களின் உப்பு வரிக்கு எதிராக தண்டி நோக்கி 388 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை சென்ற சுதந்திர வேட்கையை அதிகரித்தது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

இந்திய முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கன்னியாகுமரியிலிருந்து டெல்லி ராஜ் காட் வரை கடந்த 1983 ஆண்டு 4,260 கி.மீ தூர யாத்திரையை மேற்கொண்டார். மக்களின் பிரச்சனைகளை வலியுறுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த யார்த்திரைக்கு பாரத யாத்திரை என்று பெயரிடப்பட்டது. 1983 ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை ஜூன் 25 ஆம் தேதி நிறைவடைந்தது.

சுனில் தத்

சுனில் தத்

1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் இந்திய அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்த சமயத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான சுனில் 2000 கி.மீ. தூர யாத்திரையை மேற்கொண்டார். 78 நாட்கள் நீடித்த இந்த யாத்திரை அமிர்தசர் ஹர்மிந்தர் சாஹிப் கோயிலில் நிறைவடைந்தது. மஹாசாஹிப் பாதயாத்திரை என்று அழைக்கப்பட்ட இதன் முடிவில் அமைதியை வலியுறுத்தினார் சுனில் தத்.

 அத்வானியின் ரத யாத்திரை

அத்வானியின் ரத யாத்திரை

பாஜக மூத்த தலைவர் அத்வானி, கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் ரத யாத்திரை மேற்கொண்டார். மண்டல் கமிஷன் பரிந்துரைபடி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் வி.பி.சிங் முடிவெடுத்த நிலையில், அதற்கு எதிராக பாபர் மசூதி விவகாரத்தை கையில் எடுத்தது பாஜக. இதற்காக குஜராத்தின் சோம்நாத்தில் ரத யாத்திரை தொடங்கிய அத்வானி மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் சென்று அயோத்தியில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையால் பல மாநிலங்களில் கலவரங்களும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அத்வானியின் ரத யாத்திரையே பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ராஜசேகர ரெட்டி

ராஜசேகர ரெட்டி

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்கு 1,475 கி.மீ தூரம் பாத யாத்திரை மேற்கொண்டார். 3 மாதங்கள் நீடித்த இந்த பாத யாத்திரையே ராஜசேகர ரெட்டியை மாபெரும் தலைவராக ஆந்திர மக்கள் மத்தியில் உயர்த்தியது. அடுத்து 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று ஆந்திர முதலமைச்சராக அவர் தேர்வானார்.

சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன்

சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ராஜசேகர ரெட்டியை பின்பற்றி 1,700 கி.மீ தூர பாத யாத்திரை மேற்கொண்டார். அடுத்த நடைபெற்ற தேர்தலில் அவரால் வெற்றிபெற முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது தந்தை ராஜசேகர ரெட்டியை போல் தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 125 தொகுதிகள், 13 மாவட்டங்களில் 430 நாட்கள் யாத்திரை சென்றார்.

திக் விஜய் சிங் யாத்திரை

திக் விஜய் சிங் யாத்திரை

கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் 192 நாட்கள் தனது மனைவியுடன் யாத்திரை மேற்கொண்டார். 3,300 கிலோ மீட்டர் தூர இந்த பாத யாத்திரையால் மத்திய பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் எழுச்சி பெற்றது. இதன் தொடர்ச்சியாக அந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வென்றது. ஆனால், கமல்நாத்தை முதலமைச்சராக்கியது காங்கிரஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+