சித்தர் சொன்னார் செஞ்சேன்.. போலீஸையே கன்பியூஸ் செய்த குருஜி மகாவிஷ்ணு
சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய விவகாரத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையின்போது சித்தர்கள் தன்னிடம் பேசுவார்கள் என்றும், அவர்கள் தன்னை வழிநடத்தியதன்படி தான் அப்பள்ளியிலும் பேசினேன். வேறு எந்தவொரு உள்நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பேச்சாளர் மகாவிஷ்ணுவை அழைத்துப் பேச வைத்துள்ளனர். அப்போது அவர் "மாற்றுத் திறனாளிகள் குறைபாடுகளுக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம். மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள்.

அதேபோல, கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது பேசுபொருளாகியுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியின்போது மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சை எதிர்த்த மாற்றுத் திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால், மகாவிஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மகாவிஷ்ணுவின் பேச்சு மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினரும் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விசாரணையில் இறங்கியது பள்ளிக் கல்வித் துறை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் இருவரும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, சென்னை திரும்பிவந்து போலீஸாருக்கு உரிய விளக்கம் அளிப்பதோடு, விசாரணைக்கும் ஒத்துழைப்பேன் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் மகாவிஷ்ணு.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே போலீஸார் கைது செய்தனர். மகா விஷ்ணு மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி வரை மகா விஷ்ணு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் மகாவிஷ்ணு கூறியதாக பல்வேறு சுவாரஸ்ய தகவல் வேளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், சித்தர்கள் ஆசிர்வாதத்தால் 5 லட்சம் பேர் தன்னை யூடியூப் தளத்தில் பின்தொடர்கின்றனர். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பேசியுள்ளேன்.
இதேபோல 5 நாடுகளில் சொற்பொழிவாற்றி வருகிறேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள். சித்தர் சொன்னார் அதன்படி தான் அப்பள்ளியிலும் நான் பேசினேன். அவர்கள் என்னை வழிநடத்தியதன்படி தான் அப்பள்ளியிலும் பேசினேன். வேறு எந்தவொரு உள்நோக்கத்தோடும் பேசவில்லை. மாணவர்களை வழிநடத்தும் நோக்கத்தில்தான் பேசினேன். எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் குறித்து இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை என்று மகாவிஷ்ணு கூறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications