முற்பிறவி பாவம்.. மகாவிஷ்ணு இன்னும் 14 நாட்கள் சிறையில் இருக்கனும்
சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் கலந்துகொண்டு பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று பேசினார்.

அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் இதனை கடுமையாக எதிர்த்தார். அந்த ஆசிரியர் மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தார். பதிலுக்கு அவரும் உங்கள் பெயர் என்ன? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் தான் உங்களுக்கு நான் பதில் சொல்வேன் என மகா விஷ்ணுவும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான் வீடியோ இணையத்தில் பரவியது. மகாவிஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் காவல்துறையில் புகாரும் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விசாரணையில் இறங்கியது பள்ளிக் கல்வித் துறை. விசாரணையை அடுத்து அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவள்ளூர் கோவில் பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்தார். இதற்கிடையே மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன் என மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மகா விஷ்ணுவை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். போலீஸ் விசராணையில் மகாவிஷ்ணு கூறியதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், சித்தர்கள் ஆசிர்வாதத்தால் 5 லட்சம் பேர் தன்னை யூடியூப் தளத்தில் பின்தொடர்கின்றனர். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பேசியுள்ளேன்.
இதேபோல 5 நாடுகளில் சொற்பொழிவாற்றி வருகிறேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள். சித்தர் சொன்னார் அதன்படி தான் அப்பள்ளியிலும் நான் பேசினேன். அவர்கள் என்னை வழிநடத்தியதன்படி தான் அப்பள்ளியிலும் பேசினேன். வேறு எந்தவொரு உள்நோக்கத்தோடும் பேசவில்லை. மாணவர்களை வழிநடத்தும் நோக்கத்தில்தான் பேசினேன். எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் குறித்து இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை என்று மகாவிஷ்ணு கூறியதாக தகவல்கள் வெளியாகின.
மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து சைதாப்பேட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications