அதுதான் தோனியின் தமிழ்நாட்டு பாசம்.. இவ்வளவு நாள் சொல்லாம.. இன்னைக்கு சொன்னார் பாருங்க.. செம பின்னணி
சென்னை: இந்திய அணியின் மூத்த வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று தனது ஓய்வை அறிவித்து இருப்பதற்கு பின் முக்கியமான ஒரு விஷயமும் இருக்கிறது.
Recommended Video
கிரிக்கெட் உலகமே அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது தோனி தனது ஓய்வு முடிவை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி வெளிப்படையாக அறிவித்துள்ளார் .
இனி ஒருநாள் மற்றும் டி20, டெஸ்ட் என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார்.

சிஎஸ்கே எப்படி
சிஎஸ்கே அணிக்காக இவர் தொடர்ந்து விளையாடுவார். தோனிக்கு சென்னை எப்போதும் இரண்டாவது தாய் வீடு போன்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் அவருக்கு எப்போதும் முக்கியம். இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார் . சென்னை அணி இல்லாத இரண்டு வருடம் தான் பட்ட கஷ்டங்களை , வேதனைகளை அவர் உருக்கமாக பேசி இருக்கிறார். மீண்டும் சென்னை அணி மீண்டு வந்த போது,அதற்கான அறிமுக மேடையிலேயே கண்ணீர் விட்டு இருக்கிறார்.

தமிழக மக்கள்
சென்னை மட்டுமின்றி மொத்த தமிழக மக்களையும் இவருக்கு பிடிக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் பல ஊர்களுக்கு இவர் டிரிப் அடித்து இருக்கிறார். சென்னையில் பைக்கில் சுற்றி இருக்கிறார். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா , கருணாநிதியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். நடிகர் விஜய், அஜித், சூர்யா உடன் நெருக்கமாக இருந்துள்ளார். சென்னை மட்டுமின்றி ஊட்டி கொடைக்கானலுக்கும் இவர் சென்று இருக்கிறார்.

தங்கள் மகன்
தமிழகமும் இவரை தங்கள் சொந்த பிள்ளையாக நினைத்துதான் நடத்தி இருக்கிறார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் , இவர் மட்டும் அதில் சிறப்பான இடத்தை கொடுத்தது. இதனால் இன்னும் சில வருடங்கள் இவர் சென்னை அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது . சென்னை அணியில் இருந்து எதிர்காலத்தில் ஓய்வு பெற்றாலும். தொடர்ந்து சென்னையில் அணியில் முக்கிய முடிவுகளை இவர் எடுப்பார்.

ஓய்வு
இப்படி தமிழகம், சென்னை உடன் அதிக நெருக்கமும் காட்டும் தோனி, சரியாக தனது ஓய்வு முடிவை சென்னையில் அறிவித்து இருக்கிறார். தோனி தனது ஓய்வு முடிவை முன்பே எடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் இத்தனை நாட்கள் காத்து இருந்து அவர் ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார். அதாவது சென்னைக்கு வந்து, சிஎஸ்கேவில் இணைந்த பின் சரியாக ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார்.

சென்னை முக்கியம்
சென்னையில் இருந்துதான் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று காத்திருந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள். சென்னை அணி நிர்வாகத்துடனும் அவர் இது தொடர்பாக ஆலோசனை செய்தார் என்று கூறுகிறார்கள். தமிழகத்திற்கு கொடுக்கும் பெரிய மரியாதையாக அவர் இதை பார்க்கிறார் என்று கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications