அசத்தல் அறிவிப்பு.. ஹஜ் பயணம் போக ஆசையா.. முதல்ல இதை பாருங்க.. லாஸ்ட் தேதி இதான்.. தமிழக அரசு அதிரடி
ஹஜ் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்கள் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: ஹஜ் பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..

ஹஜ் குழு
அதில், 2023-ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது என்றும், ஹஜ் பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 10 ஆம் தேதி கடைசி என்றும் தெரிவித்துள்ளார். அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது: ஹஜ்-2023-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2023-ற்காக விண்ணப்பிக்கும் முறை 10.02.2023 முதல் ஆன்லைனில் தொடங்கி, 10.03.2023 அன்று முடிவடைகிறது.

2 தடுப்பூசிகள்
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் "HCoI" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். ஹஜ் 2023-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19-க்கு எதிரான இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும்.

கடைசி தேதி
இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த ஆண்டு, ஹஜ் பயணிகள் சென்னை புறப்பாட்டுத் தளத்திலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

லாஸ்ட் நாள்
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 10-03-2023 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 03-02-2024 வரையில் செல்லக் கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் 2023-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் (online) மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10-03-2023 என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications