அதிமுக செயற்குழு கூட்டத்தின் ‘மெயின் தீம்’ இதுவா..? அந்த பிரச்சனை நடக்காது.. சூழ்நிலை சரியில்ல..!
சென்னை : அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜக பல்வேறு போராட்டங்களை அறிவித்து தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக சுணங்கியிருப்பதாக பொதுவாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், 'பழைய பன்னீர்செல்வமா வரணும்' என்ற திட்டத்தோடு பன்னீர்செல்வமும், பழனிசாமியும் இணைந்து அதிமுகவை பலப்படுத்தும் முயற்சிகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக செயற்குழு
வரும் ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு பேலஸ் மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் ஏன்
கடந்த மாதமே அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், கட்சிக்குள் நிலவி வந்த பல்வேறு குழப்பங்கள் காரணமாக கூட்டம் நடத்துவது தள்ளிப்போனது. ராஜ்ய சபா வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முரண்பாடுகளைக் கொண்டிருந்ததால் செயற்குழு கூட்டம் நடத்துவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில், அந்தப் பிரச்னை ஆளுக்கு ஒரு சீட் என ஒருவழியாக தீர்க்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்தக் கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முந்தும் அண்ணாமலை
அதுபோக, இன்று செயற்குழு கூட்ட அறிவிப்பு வெளியானதற்கு இன்னொரு விஷயமும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சியான அதிமுக சுணங்கியிருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சிப் பணிகளை வேகப்படுத்தி, பிரதான எதிர்க்கட்சியைப் போல செயல்பட்டு வருகிறார். திமுக அரசின் ஒவ்வொரு முடிவுக்கும் உடனடி எதிர்வினை, பிரஸ் மீட் என மிரள வைக்கிறார் அண்ணாமலை. இது மக்கள் மத்தியிலும் கவனத்தை பெற்று வருகிறது.

காலத்தின் தேவை
பாஜக தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அதிமுக செயல்படவே இல்லை என்று அக்கட்சியின் தொண்டர்களே புலம்பும் நிலை இருக்கிறது. இது அதிமுக சீனியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே அதிமுக சீனியரான பொன்னையன், பாஜக அதிமுகவை விழுங்கிவிடும் என எச்சரிக்கும் வகையில் பேசினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெ. பேரவை கூட்டத்தில் இந்த விவகாரம் சூடாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வேகமாகச் செயல்படுவது காலத்தின் தேவை என அதிமுக இரட்டைத் தலைமை முடிவெடுத்துள்ளது.

ஒற்றைத் தலைமை
இந்தச் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பை-லாவில் சில திருத்தங்களைச் செய்யவிருப்பதாக முன்னர் பேச்சு அடிபட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை எடுத்துவிட்டு, தலைவர், செயல் தலைவர் ஆகிய பொறுப்புகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. அதிலும், யார் தலைவர் என்பதில் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்க்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. தற்போதைய சூழலில் புதிய பிரச்சனைகள் வேண்டாம் என இருவருமே கருதுவதால் இந்த செயற்குழு கூட்டத்தில் அப்படிப்பட்ட திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

அவைத் தலைவர்
அ.தி.மு.கவின் தற்காலிக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன், இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் நிரந்தர அவைத்தலைவர் ஆக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அல்லது அந்தப் பதவி அதிமுக சீனியரான இன்னொருவருக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய போராட்டங்கள்
எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இனி முழுவீச்சில் செயல்படுவதற்கான திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. திமுக தவறு செய்யும் விஷயங்களையும், இதுவரை நிறைவேற்றாத வாக்குறுதிகள் பற்றியும் போராட்டங்களை நடத்தவேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியினருக்கு உத்தரவு
கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டுமென்றால், கீழ்மட்ட அளவில் வேலைகளை முடுக்கிவிட வேண்டும். கீழ்மட்ட அளவில் உள்ள நிர்வாகிகளை, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும், அதுதொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது. தோல்விப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் அதிமுக-வை மீட்டெடுக்க இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஓ.பி.எஸ்ஸும், இபிஎஸ்ஸும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே












Click it and Unblock the Notifications