Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்டு லட்டாக 4 முக்கிய அறிவிப்பு.. மதிவேந்தன் பேச பேச, மலைத்த தமிழக சட்டசபை.. ஆமா, அதென்ன கடைசியில?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.. அப்போது, சட்டமன்ற உறுப்பினர்களிடம் முக்கிய வேண்டுகோளையும் மதிவேந்தன் அப்போது விடுத்தார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

Major and Happy announcement and minister mathiventhan says, members of the legislature should plant saplings

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் 3 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கருணாநிதி : தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிவிப்பு நிலையில் அதிமுக ஆட்சியில் இந்த ஓய்வூதியம் 3 லட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டது. இது குறித்து நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையின் வருவாய் துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டது.

அதில் அதிமுக சார்பில் ஆர். காமராஜ் பேசும்போது, "அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது 90 சதவிகிதமாக வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் ரூ. 500 ஆக இருந்த ஓய்வூதியம் ரூ. 1000ஆக உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சியில் 4 லட்சம் பேருக்கு ரூ.1,200 கோடியாக ஒதுக்கப்பட்ட தொகை, எங்கள் ஆட்சியில் ரூ.4,200 கோடியாக உயர்த்தப்பட்டது" என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.35 ஆக இருந்த ஓய்வூதியத்தை ரூ. 500 ஆக உயர்த்தினார்.. 2014-15ம் ஆண்டில் 4.38 லட்சம் பேர், அதற்கடுத்த 7 ஆண்டுகளில் 15.20 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.. அவர்கள் இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான மதிப்பில் சொத்து வாங்கியவர்கள் ஆவார்.. முதியோர் ஓய்வூதியம் வழங்காமல் நீக்கப்பட்ட 3 லட்சம் பேரில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதில் 1.60 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது, மீதி இருப்பவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் அமைச்சர்.

வரையாடுகள்: இந்நிலையில், இன்றைய தினம், நீலகிரி வரையாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதி தெரிவித்துள்ளார்... இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர், " வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு 13 ராம்சாட் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. யானைகள் பாதுகாப்பிற்காக முதுமலை யானைகள் சரணாலயத்தை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Major and Happy announcement and minister mathiventhan says, members of the legislature should plant saplings

வனக்கோட்டம்: யானைகள் இறப்பு குறித்து விரிவான பகுத்தாய்வு செய்வதற்கு கூட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ. 20 கோடியில் அமைக்கப்படும்./ தஞ்சை மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.3.70 கோடியில் மேற்கொள்ளப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடியில் புனரமைக்கப்படு. சதுப்பு நிலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.20 கோடியில் பள்ளிக்கரணையில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். இயற்கையான ஈர நிலங்களில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் மையம் அமைக்கப்பட உள்ளது.. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பறவை காப்பாளர்களுக்கு கல்வி தொடர்பான தகவல்களை மையம் வழங்கும்" என்று அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

மேஜர் கோரிக்கை: இந்த அறிவிப்புகள் எல்லாம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமைச்சர் மதிவேந்தன் தன்னுடைய உரையில் முக்கிய கோரிக்கை ஒன்றை சட்டமன்ற உறுப்பினர்களிடம் விடுத்திருந்தார். மதிவேந்தன் பேசும்போது, "முதலமைச்சரின் பசுமைக்காப்போம் திட்டத்தில் இணைய பலரும் ஆர்வமாக உள்ளனர். இப்போது வரை இந்த திட்டத்தில் இணைய 58 ஆயிரம் பேர் முன் வந்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு முதலமைச்சரின் இந்த திட்டத்தில் இணைய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+