"கொதிக்கும் பால்".. அடுத்த ஷாக்.. இன்று முதல் தனியார் பால் விலையும் உயர்ந்தது.. எவ்வளவு தெரியுமா?
ஆவினை தொடர்ந்து தனியார் பால் விலையும் இன்று முதல் உயர்கிறது
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது.. இந்த விலை உயர்வு மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 18ம் தேதி , பால் பொருட்களான தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்டவற்றிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மத்திய அரசு... ஏற்கனவே நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளதால் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிட்டெட், ஆவின் தயாரிப்புகளான தயிர், நெய் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்திவிட்டது..

தயிர் பாக்கெட்
இதற்குக் காரணம், மத்திய அரசு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதே என்று கூட்டமைப்பு விளக்கம் ஒன்றை தந்திருந்தது.. ஆவின் தயாரிப்புகளின் விலை உயர்வானது வெறும் 3 மாதங்களில் 2 முறையாக நடைபெற்றது.. அதாவது, மார்ச் மாதம், நெய் ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தியிருந்த, ஒரு லிட்டருக்கு 50 ரூபாயாகவும், தயிருக்கு 10 ரூபாயாகவும் மறுபடியும் உயர்த்தியது.. அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் தயிர் பாக்கெட்டிற்கான விற்பனை விலையை உயர்த்தின..

ஆவின் பால்
தயிரினை லிட்டருக்கு 4 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை உயர்த்தி, 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு 15 சதவீதம் வரை விலையை உயர்த்திவிட்டன. இது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில், இன்று முதல் தனியார் பல் விலையும் உயர்கிறது.. தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது... இதுவும் பொதுமக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

தனியார் பால் விலை
காரணம், தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. அதிலும், ஆவின் பாலை விட தனியார் பாலின் விலை அதிகமாகவே காணப்படுகிறது. அப்படி இருக்கும்போது, இந்த பாலின் விலையும் உயர்த்தப்படுவது, கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. இப்படி விலை ஏற்றுவது, 3 வது முறையாகும்.. தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூபாய் 4 வரை உயர்த்தப்பட்டுள்ளது...
Recommended Video

தன்னிச்சை
பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இதனிடையே தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.. தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த முடிவை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பால் விலை உயர்வை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications