சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மாணவர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு.. பள்ளிக்கல்வி துறை அதிரடி.. அலர்ட் ஆகும் பெற்றோர்கள்

பள்ளி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் 2 ஆயிரத்தை தொற்று பாதிப்பு கடந்துவிட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்

    தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது... ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    மக்கள் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது..

    பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. தமிழக மருத்துவத்துறை அதிரடி உத்தரவு பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. தமிழக மருத்துவத்துறை அதிரடி உத்தரவு

     தமிழக அரசு

    தமிழக அரசு

    அதனாலேயே மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு தற்போது மீண்டும் அறிவுறுத்தியுள்ளது... இதை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

     பறந்த உத்தரவு

    பறந்த உத்தரவு

    இந்நிலையில், பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஒரு செய்திக்குறிப்பும் வெளியிட்டுள்ளது.. அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.

     கிளாஸ் ரூம்கள்

    கிளாஸ் ரூம்கள்

    மேலும் பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை நடத்திய பின்னரே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டால் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் இந்த ஆலோசனையை நடத்துகிறார்... தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகின்றன.. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஏதாவது முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    major announcement and tn school education dept orders students must have to wear face mask in school campus பள்ளி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X