"ஃபுல் பவர்".. ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி.. "லிஸ்ட் எங்கே, உடனே அனுப்புங்க".. சைலேந்திர பாபு அதிரடி
சென்னை: புதிய ரவுடிகள் யார் யார் என்று கணக்கெடுத்து லிஸ்ட் அனுப்புமாறு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கு சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்... இதையடுத்து, தமிழக காவல்துறையின் அடுத்த ஆபரேஷன் ஆரம்பமாகி உள்ளது.
டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, சைலேந்திர பாபு எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக உள்ளார்.,
பதவியேற்றதுமே இவர் 2 முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார்.. ஒன்று, தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்குவது, மற்றொன்று குழந்தைகள் கடத்தலை ஒழிப்பதுதான். அதன்படியே, ஆக்ஷனில் இறங்கினார்..

அட்டகாசம்
குழந்தைகள் கடத்தல் கும்பல்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார்.. அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் அதிரடியாக கைது செய்தார்.. இந்த விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக டிஜிபியை கூப்பிட்டு பாராட்டியதாகவும் செய்திகள் வந்தன.. எனினும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியது. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கடுமையாக விமர்சித்தன.. ரவுடிகள் அட்டகாசம் குறித்து கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தலையிட்டு, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்..

1 நம்பர்
"தமிழகம் நம்பர் 1" என்ற நிலையை அடைய வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை, உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்... மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். அதனால், அனைவரும் நேர்மையாக, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவோருக்கு, அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.. குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்..

அச்சுறுத்தல்
முதல்வர் இப்படி தெரிவித்ததையடுத்து, டிஜிபி களமிறங்கினார். பல வருட காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடிகளையும் நாலாபுறமும் வேட்டையாடி போலீசார் கைது வேட்டையை நடத்தினர்.. தமிழ்நாட்டில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மண்டல ஐ.ஜி.க்களும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறையினரின் நடவடிக்கை தீவிரமானதை தொடர்ந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டனர்.,

டிஜிபி சைலேந்திரபாபு
பெரும்பாலான ரவுடிகள், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.. வெளி மாநில ரவுடிகளுக்கும் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அடைக்கலம் தருவதாக தெரிகிறது. எனவே, வெளி மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள ரவுடிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று அடுத்த ஆபரேஷனை துவங்கினார் டிஜிபி சைலேந்திரபாபு.. அதாவது, வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டது.. இந்நிலையில், இன்னொரு அறிவிப்பினையும் டிஜிபி பிறப்பித்துள்ளார்.

லிஸ்ட் எங்கே
புதிய ரவுடிகள் யார் யார் என்று கணக்கெடுத்து லிஸ்ட் அனுப்புமாறு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கு சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதி, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் ரவுடி, மற்றும் கூலிப் படை மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறையில் அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு செயல்படுகிறது... இந்த பிரிவுக்கு டிஜிபி சைலேந்தரபாபு முக்கிய உத்தரவை பிறப்பித்து, இதற்காகவே ஒரு சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபுல் பவர்
"காவல் நிலைய பட்டியலில் இல்லாத ரவுடிகள் மற்றும் ஜாமீனில் வெளிவந்துள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிடியாணைகளை செயல்படுத்த வேண்டும்.. குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப "ஏ பிளஸ் ஏ பி சி" பிரிவு என ரவுடிகளை வகைப்படுத்த வேண்டும். ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரையும் கைது செய்ய வேண்டும். புதிதாக ரவுடியிசத்தில் ஈடுபடும் நபர்களை பற்றி அனைத்து தகவல்களுடன் பட்டியல் தயாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ரவுடிகளின் கட்டுப்பாடுகள் மேலும் குறைந்து, சட்டம் ஒழுங்கு இன்னும் சீர்படும் என்றும் நம்பப்படுகிறது.
-
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications