Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடியாப்ப சிக்கல்.. போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தமா.. இன்று கடைசி பேச்சுவார்த்தை.. இழுபறி

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் நடக்க உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.. ஒருவேளை இதில், ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், உடனடியாக வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 போக்குவரத்து கழகங்களில், கிட்டத்தட்ட 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்...

இவர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-லேயே அமல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஏற்பட்டு வந்தது..

இந்நிலையில்தான், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் முன்வைத்து வருகிறார்கள்

 அடுத்தடுத்து தோல்வி

அடுத்தடுத்து தோல்வி

இதை உடனடியாக நிறைவேற்ற கோரியும், சமீபத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்... எனினும், 14வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை... எனவே, இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், "ஆகஸ்ட் 3 ம் தேதி (இன்று) எந்த விடுப்புகளும் ஊழியர்களுக்கு தரப்பட மாட்டாது.. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படும்.. பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும்.. தொழிலாளர்கள் அனைவரும் 3.8.2022 (இன்றோ) அல்லது அதற்கு பின் எந்தவொரு நாளிலோ நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கு பெறாமல் வழக்கம் போல பணிக்குத் தவறாமல் வர வேண்டும்.. பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று எச்சரிக்கப்பட்டது.

சிக்கல்

சிக்கல்

இதையடுத்து, இன்றைய தினம் மீண்டும் 6வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது... போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்...

வார்னிங்

வார்னிங்

ஒருவேளை இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.. போராட்டம் நடத்தக்கூடாது என்று அரசு வார்னிங் தந்திருந்த நிலையில், அதை போக்குவரத்து ஊழியர்கள் ஏற்பார்களா? அல்லது அறிவித்தபடி ஸ்டிரைக் நடத்துவார்களா தெரியவில்லை.. ஒருவேளை ஸ்டிரைக் நடத்தப்பட்டால், அது அரசுக்கு மேலும் சிக்கலையே ஏற்டுத்தும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+