அடிதூள்.. இனி இவர்களின் குடும்பத்திற்கு "ரூ.2000 பணம்".. தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை ரூபாய் 1000 ஐ தமிழ்நாடு அரசு எப்போது வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்த திட்டம் எப்போது கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

எதிர்பார்ப்பு
திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பின் இந்த உரிமை தொகையை வரும் மார்ச் 8ம் தேதி.. அதாவது சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டம் செயல்படும்
விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடந்து வருவதாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தேர்தல் முடிந்து அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

புதிய திட்டம்
இந்த நிலையில்தான் குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை ரூபாய் 1000 ஐ தமிழ்நாடு அரசு எப்போது வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மரணம் அடையும் பட்சத்தில் அவர்களின் வாரிசுகளுக்கு ரூபாய் 2000 வழங்கப்படும். ஆனால் இது மாதம் மாதம் வழங்கப்படும் தொகை அல்ல. மாறாக ஒரு முறை மட்டும் வழங்கப்படும் தொகை ஆகும்.

தொகை
மாற்று திறனாளிகள் ஈம செலவிற்காக இந்த பணம் கொடுக்கப்படும். அதற்கு மாற்று திறனாளிகளின் ஐடி கார்டை உறவினர்கள் கொடுக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு தேசிய அளவில் ஐடி கார்ட் வழங்கப்பட்டு உள்ளது. இதை காட்டி நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கார்ட் இல்லாதவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக!












Click it and Unblock the Notifications