Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருகும் "காவி"?.. என் வேஷ்டியை பார்த்தாலே பயம்.. கலைஞர் சொன்னாரே "இந்தியாவே இருக்காது".. ஆ. ராசா நச்

திமுக எம்பி ஆ ராசா, பாஜகவுக்கு முக்கிய சவால் ஒன்றை திருச்சி கூட்டத்தில் விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜகவுக்கு திமுகவின் மூத்த தலைவரும், எம்பியுமான ஆ.ராசா ஒரு சேலஞ்ச் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை, திமுகவினர் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

சமீபகாலமாக இந்து மதத்துக்கு அடித்தளமாக இருக்கும் மனு நீதி, வேத நூல்கள் உள்ளிட்டவை விவாத பொருளாகி வருகின்றன.. அதிலும் குறிப்பாக திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட இயக்கங்கள், மனுநீதியை அதிதீவிரமாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், திமுக எம்பியும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் பேச்சுக்கள் பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருவதுடன், சில சமயங்களில் சர்ச்சைகளாகவும் வெடித்து கிளம்புகின்றன.

 விபச்சாரி மகன்

விபச்சாரி மகன்

கடந்த 6-ம் தேதி பெரியார்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் சொல்கிறது... இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கிற வரை நீ விபச்சாரியின் மகன்... இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்... இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன்...

 4வது வர்ணம்

4வது வர்ணம்

எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான், அது சனாதனத்தை முறியடிக்கிறது என்பதை விடுதலையும், முரசொலியும், திமுகவும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தில் 4-வது வர்ணமாகிய சூத்திரர்கள் மனு ஸ்மிருதியில் இழிவுபடுத்தப்பட்டது ஏன்?" என்று ராசா எழுப்பிய கேள்வி, பாஜக மற்றும் இந்து அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டன.. அதன் வீர்யங்களும் இன்னும் குறையவில்லை.

 சேலஞ்ச்

சேலஞ்ச்

இதோ, மீண்டும் காவியை சீண்டி, பாஜகவுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார் ஆ.ராசா.. இந்திமொழி திணிப்பை கண்டித்து, திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில், ஆ.ராசா பங்கேற்று பேசினார்.. அந்த பேச்சின் சுருக்கம்தான் இது: "நான் ஒரு கூட்டத்தில் சொன்னேன், என் தலைவர் முக ஸ்டாலினை பார்த்து மோடிக்கு பயம் என்றேன்.. அதுக்கே என்னை கிண்டல் செய்தார்கள்.. தலைமையை பார்த்து அல்ல, எங்கள் தலைவர் முக ஸ்டாலின் காரிலே நான் ஏறி போகிறேன் என்பதற்காக என்னை பார்த்து பயப்படுகிறீர்கள்? என் வேட்டியை பார்த்து பயப்படுகிறீர்கள்? கறுப்பு சிவப்பு நிறத்தை பார்த்து பயப்படுகிறீர்கள்?

 காவியா + கருப்பு சிவப்பு

காவியா + கருப்பு சிவப்பு

என்ன காரணம்? 2024-ல் கருப்பு சிவப்பா? காவியா? பார்த்துடலாமா? மம்தா வந்து பார்த்துட்டு போயிட்டாங்களே, எல்லாரும் வந்து பார்த்துட்டு போயிட்டாங்களே, 2024-ல் யார் பிரதமர் என்பதில் நம் தலைவர் இருக்கிறார் என்பதை டெல்லியில் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.. இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக மட்டுமா? அது பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயம்.. வேறு ஒரு பண்பாடு, எங்கள் பண்பாட்டை திங்க பார்க்குது, மென்றுவிழுங்க பார்க்குது.. அடியோடு காலி செய்ய பார்க்கிறது.

நீக்ரோக்கள்

நீக்ரோக்கள்

எங்களுக்கென்று அடையாளம் இருக்கிறதே.. ஒரு மொழி, வெறுமனே பேசுகின்ற மொழியாக இருந்தால் அதற்கு அடையாளம் இருக்காது.. நீக்ரோக்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.. இனத்தால் நீக்ரோக்கள் அவர்கள்.. ஆனால் அந்த இனம் மொழிவழியானது கிடையாது.. மொழி அடிப்படையில் ஒரு இனம் இருந்தால்தான், அந்த இனத்துக்கே பெருமை.. மொழிவகையாக இருக்கின்ற ஒருசில இனங்களில், மூத்த இனம் தமிழ் மட்டும்தான்.. அது தமிழால் வந்த உணர்வு.. இந்தி எதிர்ப்பு என்பது அண்ணா காலத்தில், பெரியார் காலத்தில் நம் இனத்தை காப்பாற்றி கொள்வதற்கான ஒரு போராட்டமாக சுருங்கி இருந்தது..

 உதை விழும்

உதை விழும்

ஆனால், இன்றைக்கு அமித்ஷாவும், மோடியும் செய்கின்ற வேலை, ஏக இந்தியாவுக்கும் ஒரே மொழி என்கிறார்கள்.. ஏனென்றால், எல்லா பண்பாட்டையும் அது அழித்து விட்டது.. மதம் என்றால் தவறு இருக்கும். தவறு என்றால் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்ளாவிட்டால் "உதை" விழும். தீபாவளி வாழ்த்து சொல்லாததற்கு காரணம் கேட்டால், அதன் பின்னணியே அசிங்கமாக இருக்கும். பாஜகவின் கையை கட்டிப்போட்ட பெருமை கருணாநிதிக்கு உண்டு. இன்னும் எங்களது எம்பிக்களை கண்டு பாஜக பயப்படுகிறது. ஜாதி அடையாளத்தை ஒழித்தது தான் திராவிடத்தின் சாதனை..

 கருணாநிதி டிராயிங்

கருணாநிதி டிராயிங்

கேரளாவுக்கென்று ஒரு பண்பாடு உள்ளது, மேற்கு வங்கத்திற்கென்று ஒரு பண்பாடு உள்ளது.. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, அது ஒன்றியம். அனைத்து கலாச்சாரத்தையும் போற்ற வேண்டும் என்று நேரு சொன்னார்.. கலைஞர் ஒருமுறை சொன்னார், ஒரு இயற்கை காட்சியை ஓவியமாக வரைய வேண்டும், அங்கே ஒரு ஆறு ஓடுகிறது.. அதில் ஒரு பறவை தண்ணீர் குடிக்கிறது.. பக்கத்தில் ஒரு படகு நிற்கிறது.. அதை 2 பேர் மேலிருந்து பார்க்கிறார்கள்.. சுற்றிலும், செடி கொடிகள் இருக்க வேண்டும்.. இப்படி ஒரு படம் வரைய வேண்டும்..

 கலர் தண்ணீர்

கலர் தண்ணீர்

அப்படியானால், தண்ணீருக்கு நீல கலர் வேண்டும், பறவைக்கு ஒரு கலர் தர வேண்டும், செடிகொடிகளுக்கு பச்சை கலர் தர வேண்டும்... அதாவது ஒரு ஓவியத்தை வரைய வேண்டும் என்று சொன்னால், அந்தந்த நிறத்தில், அந்தந்த உருவத்தில் வரைந்தால்தான், அது ஓவியமாக தெரியும்.. நாங்கள் தனித்துவமின்றி ஒரே மாதிரியாகயாகவே இருப்போம் என்றால், அந்த ஓவியத்தை எல்லாம் ஒரே கலரில் அடிக்க முடியுமா? அப்படி ஒரே கலரில் அனைத்தையும் வரைவதாக இருந்தால், அங்கே ஓவியம் இருக்காது.. ஒரே மொழி என்று சொன்னால் இந்தியாவே இருக்காது என்றார்..

 கெத்து துணிச்சல்

கெத்து துணிச்சல்

இதே பிரச்சனைதான் இன்றும் நீடிக்கிறது.. ஒரே மொழி என்று சொன்னால், அந்தந்த மாநிலத்தின் பண்பாடுகளை, குறிப்பாக அந்தந்த தேசிய இனங்களின் பண்பாட்டை, மொழிக்கூறுகளை அழிக்க யுக்தியை பாஜக செய்து வருகிறது.- மோடி செய்கிறார், அமித்ஷா செய்கிறார்.. ஆர்எஸ்எஸ் செய்கிறது, பங் பரிவார் செய்கிறது.. இவைகளை எல்லாம் ஒரே துணிச்சலுடன் எதிர்க்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம், ஒரே தலைவன் முக ஸ்டாலின்.. அவருக்கு பின்னால் அணிவகுப்போம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+