"இன்னும் பத்தே நாட்கள்.." மெட்ரோவில் வரும் அதிரடி மாற்றம்! சென்னை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்
சென்னை: சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இங்குக் கூட்ட நெரிசலும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதைக் குறைக்கும் நடவடிக்கையிலும் சென்னை மெட்ரோ நிர்வாகம் இறங்கியுள்ளது.
தலைநகர் சென்னையில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் வாகனங்களில் சாலை நெரிசல் என்பது ரொம்ப பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

அங்கு பீக் ஹவரில் வெளியே சென்றால் குறைந்தது சில மணி நேரமாவது சாலையிலேயே நிற்க வேண்டிய சூழலே இருக்கிறது. அந்தளவுக்கு டிராபிக் என்பது ரொம்ப மோசமான பிரச்சினையாகச் சென்னையில் மாறியுள்ளது.
சென்னை மெட்ரோ: டூ வீலர், கார்களில் செலவோருக்கு இதனால் ரொம்பவே சிரமம் தான். இதனால் தலைநகர் சென்னையில் டிராபிக்கை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்தவொரு நகரிலும் கூடுதலாகப் பாலங்கள் கட்டுவது, சாலைகள் அகலப்படுத்துவதால் டிராபிக் பிரச்சினை சரியாகாது. மக்களை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைத்தால் மட்டுமே டிராபிக் பிரச்சினை சரியாகும்.
சென்னையில் இப்போது பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ என்று பல வகை பொது போக்குவரத்து இருக்கிறது. இதில் இப்போது மெட்ரோவை பயன்படுத்தவே மக்கள் விரும்புகிறார்கள். குளுகுளு ஏசி பயணம்.. சொன்ன நேரத்தில் பக்காவான அட்டவணை உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோவை பயன்படுத்தவே மக்கள் விரும்புகிறார்கள். தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை என்று இரு வழித்தடங்களில் மெட்ரோ இயக்கப்பட்டு வருகிறது.
அதிகரிக்கும் கூட்டம்: விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட், சென்டிரல் முதல் பரங்கி மலை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. மேலும், இப்போது மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடங்களிலும் மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இப்போது செயல்படும் 54 கிமீ மெட்ரோ பாதையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இதில் ஆயிரம் விளக்குகள், கிண்டி, திருமங்கலம் மற்றும் கோயம்பேடு நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இங்கு மெட்ரோ நிலையங்களைத் தினசரி சுமார் 11,000-13,000 பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த மெட்ரோ நிலையங்களில் பீக் ஹவரில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, மக்கள் உள்ளே செல்லவும் வெளியே வரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இங்குப் பயணிகள் டிக்கெட்கள் செக் செய்யும் கேட்கள் போதுமானதாக இல்லை. இதனால் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
நடவடிக்கை: இதனால் பிக் ஹவரில் நீண்ட வரிசை இங்குக் காணப்படுகிறது. இது குறித்து பயணிகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். மெட்ரோவை பயன்படுத்துவதே எளிதாகவும் விரைவாகவும் பயணிக்க வேண்டும் என்பதற்காகத் தான்.. ஆனால், கேட்களில் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் தாமதம் ஏற்படுவதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட சென்னை மெட்ரோ இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன்படி சென்னை மெட்ரோவில் முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் கேட்களை திறக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பீக் ஹவரில் ஒரு கேட் வேலை செய்யாமல் போனால் கூட அது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிக பயணிகள் பயன்படுத்தும் ஸ்டேஷன்களில் கூடுதல் டிக்கெட் கேட்கள் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இன்னும் 10 நாட்கள்: இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "பயணிகள் உள்ளே வரும் போதும் வெளியே செல்லும் போதும் அவர்களிடம் உரிய டிக்கெட் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க இந்த கேட்கள் பயன்படுகிறது. சுமார் 450 கேட்கள் இப்போது உள்ளன. ஏற்கனவே இப்போது புதிய டிக்கெட்டிங் கேட்களை வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் 10 ஸ்டேஷன்களில் இதை நிறுவ உள்ளோம்.
இன்னும் பத்தே நாட்களில் முதற்கட்டமாகக் கூட்டம் அதிகமாக இருக்கும் கோயம்பேடு, ஆயிரம் விளக்கு ஸ்டேஷன்களில் கூடுதல் கேட்களை அமைக்க உள்ளோம். அடுத்த மூன்று மாதங்களில் கூடுதலாக 60 கேட்களை வாங்க உள்ளோம். எந்த ஸ்டேஷன்களில் தேவை அதிகம் இருக்கிறதோ.. அதன் அடிப்படையில் இதை நாங்கள் நிறுவ உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications