வீடு, நிலம் வாங்குவோர் கவனத்துக்கு.. பத்திரப் பதிவு கட்டணம் இனி எப்படி இருக்கும் தெரியுமா?
சென்னை: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தபடி கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை இருந்த சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, 2 சதவீதம் பதிவுக் கட்டண குறைப்பு ஏப்ரல் 1ம்தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏப்ரல் 3ம் தேதியான நேற்று தான் முதல் அதிகாரப்பூர்வ வேலை நாள் என்பதால் நாளை முதல் பத்திரப்பதிவு செய்ய வழக்கத்தை விட எவ்வளவு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

பத்திரப்பதிவு கட்டணம்
இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

சொத்து விற்பனை
இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

சாதகமா பாதகமா?
2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு இருந்தை போல், வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என பட்ஜெடடில் குறிப்பிடப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு சாதமாக இருக்காது என்பது ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

வீடு வாங்க வரி
உதாரணமாக தனி நபர் ஒருவர் 30 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.. 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு அவர் சொத்தை வாங்குவதற்கு எவ்வளவு கட்டணம் இருந்து என்பதை பார்ப்போம். சொத்து மதிப்பு 30 லட்சம் என்றால், முத்திரைத் தீர்வை 2.10 லட்சம் ஆகும். பதிவுக்கட்டணம் 1 சதவீதம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆக மொத்தம் 30 லட்சம் ரூபாய் சொத்துக்கு அவர் 2.40 லட்சம் ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று இருந்தது.

தனிநபர் சேமிப்பு எவ்வளவு
ஆனால் 2017ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பத்திரப்பதிவு கட்டணம் அதே 30 லட்சம் சொத்துக்கு எவ்வளவு பத்திரப்பதிவு கட்டணம் குறைந்தது என்பதை பாருங்கள். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதேநேரம் பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன்படி, 2017ம் ஆண்டு ஜூன மாதத்திற்கு பிற்கு 30 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு 20,10,000 ரூபாய் ஆக மாறியது. இதற்கு முத்திரை தீர்வை 7 சதவீதம் கட்டணம் 1,40,700 ஆகவும், பதிவுக்கட்டணம் 80,400 ஆகவும் இருந்தது. மொத்த கட்டணம் 2,21,100 ஆக குறைந்தது. அதாவது 2017 ஜூன் மாதத்திற்கு பின் 30 லட்சம் மதிப்புள்ள சொத்து வாங்கிய தனிநபருக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் 18900 ரூபாய் தொகை சேமிப்பானது.

இனி கூடுதல் செலவு
ஆனால் தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதன் படி கணக்கிட்டால், 30 லட்சம் ரூபாய் சொத்துக்கு முத்திரை தீர்வையாக 7 சதவீதம், 2.10 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். பதிவு கட்டணம் 2 சதவீதம் ரூ.60 ஆயிரம் கட்ட வேண்டும் ஆக மொத்தம் மொத்த செலவு 2,70000 ஆக இருக்கும். இதன் மூலம் 30 லட்சம் சொத்து வாங்கும் தனிநபருக்கு பத்திரப்பதிவு கட்டணம் ரூ.30,000 கூடுதலாக செலவு செய்ய வேண்டும். அதாவது நிலம், வீடு பத்திரப்பதிவு செய்வதற்கு வரும் நாளை (ஏப்ரல் 3 ) முதல் கூடுதல் தொகையை செலுத்த வேண்டும். ஏனெனில் பத்திரப்பதிவு செய்வதற்கு நாளை ஏப்ரல் 3ம் தேதி (திங்கள்கிழமை) முதல் வேலை நாள் என்பதால் நாளை முதல் கூடுதல் கட்டணத்தை செலுத்தி தான் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.

2017 ஜூன் நிலவரம்
சந்தை வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்து பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழக பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 30-ம்தேதி நடைபெற்ற, மதிப்பீட்டுக் குழுவில், 2017 ஜூன் 8 ம் தேதி வரைகடைபிடிக்கப்பட்டு வந்த சந்தைவழிகாட்டி மதிப்புக்கு ஈடாக வழிகாட்டி மதிப்பை மாற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஏப்.1 முதல் வழிகாட்டி மதிப்பை 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்ட சந்தை வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக தற்போதைய வழிகாட்டி மதிப்பை மாற்ற வேண்டும்.

பதிவாளர்கள்
இந்த மாற்றப்பட்ட சந்தை மதிப்புவழிகாட்டி தமிழகம் முழுவதும்உள்ள 54 பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து கிராமப் புலஎண்கள் மற்றும் தெருக்கள், நகர்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இம்மதிப்புகள் ஏப்ரல் 1 முதல் மாற்றம்செய்யப்படுகிறது. 2017 ஜூன் 9 அல்லது அதற்கு பிறகு விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டிருந்தால், நிர்ணயிக்கப்பட்ட மனைமதிப்பு ஜூன் 8-ல் இருந்த மதிப்புடன் ஒப்புநோக்கப்பட்டு, அதில் எது அதிகமோஅதனை வழிகாட்டி மதிப்பாக கொள்ள வேண்டும். இதனை சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.

சொத்து விற்பனை
பதிவுக்கட்டணத்தை பொறுத்தவரை, சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு 2017 ஜூன் 8 வரைகடைபிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்றுவரி மற்றும் 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் அல்லாத ஏற்பாடு ஆவணத்துக்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications