மொபைல் ரீசார்ஜ்.. கட்டணத்தில் வருது மாற்றம்! ரிசல்ட்டுக்கு பிறகு காத்திருக்கும் "இடி".. இதுவா காரணம்
சென்னை: தேர்தல் முடிவுக்கு பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்கள் உயர போகின்றன.
இன்றைய நவீன காலகட்டத்தில், செல்போன்கள் யாராலும் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்டது.. இதை உணர்ந்துதான், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

5ஜி சேவைகள்: இந்தியாவின் நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை இப்படி தொடர்ந்து வழங்கி வருகின்றன. அதேபோல, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், 5ஜி சேவைகளை பல பகுதிகளில் வழங்கி வருகின்றன.. வோடபோன் நிறுவனமும் 5ஜி சேவையை விரைவில் வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் செல்போன் ரீசார்ஜ்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 10 நாட்களுக்கு முன்பே இதுகுறித்த செய்திகள் வெளியாகியிருந்தன.. தேர்தலுக்குப் பிறகு 25 சதவீத ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் என்று ஆக்சிஸ் கேபிட்டலின் அறிக்கை தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன. இப்போது மீண்டும் இதே தகவல் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன.
டெலிகாம்: கடந்த 2021-ல் 20 சதவீதம்வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.. இப்போது, மறுபடியும் கட்டணத்தை உயர்த்த நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அந்தவகையில் 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திடீர் முடிவுக்கு காரணம், 5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்திருக்கின்றன.. 5ஜி திட்டத்தை மேம்படுத்துவதற்காக, ஏராளமான மொபைல் சேவை வழங்குனர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளார்களாம்.. இதனை ஈடுகட்டுவதற்காகவே, ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள்.
டெலிகாம் நிறுவனங்கள்: எனவே, தேர்தலுக்கு பிறகு 4G, 5G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17% சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரீசார்ஜ் பேக் விலை உயர்வு ஏற்பட்டால், பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் சொன்னாலும், ரீசார்ஜ் கட்டண விலை உயர்வதை கேட்டு வாடிக்கையாளர்கள்தான் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications