"தலையில் இடி".. வாகன "பெர்மிட்" கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு.. ஆம்னி பஸ் கட்டணமும் உயர்கிறதாமே
வாகன பெர்மிட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்
சென்னை: பொது மோட்டார் வாகனங்களுக்கான பெர்மிட் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து துறை சார்ந்த கட்டணங்களை உயர்த்த முடிவாகி உள்ளதாக தெரிகிறது.. அதன்படி, ஆட்டோ, டாக்சி, ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட், புதுப்பித்தல் கட்டணம் உயர போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
போக்குவரத்து துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், கடந்த மாதம், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதமும் பல மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியானது.
அதேபோல, மோட்டார் வாகனங்களின் பதிவுக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டது.. இது பல்வேறு தரப்பில் அதிர்வலையையும் உண்டுபண்ணியிருந்தது.

நியூ சேஞ்ச்
அதுகுறித்து விவாதங்களும், அலசல்களும் எழுந்தவாறே உள்ள நிலையில், அதற்குள் இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. போக்குவரத்து துறை மேலும் பல்வேறு கட்டணங்களை உயர்த்த முடிவாகி உள்ளது.. ஆட்டோ, வாடகை கார், தனியார் ஆம்னிபஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெர்மிட், புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது... இந்த கட்டணம் 177 சதவீதம் வரை கட்டணம் உயர போகிறதாம்.. அந்த விவரம் இதுதான்:

டூரிஸ்ட் மேக்ஸி கேப்
பஸ், சரக்கு வாகனங்களுக்கு தலா ரூ.3000, ஆட்டோவிற்கு ரூ.400, வாடகை கார் போன்ற ஒப்பந்த வாகனங்களுக்கு ரூ.1,100, ஒப்பந்த மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ரூ.1,500, தனியார் ஆம்னி பஸ்களுக்கு ரூ.5000, தனியார் சர்வீஸ் வாகனங்களுக்கு ரூ.2000, நாடு முழுவதும் செல்லக்கூடிய வாகனங்களுக்கு ரூ.3000, சுற்றுலா மோட்டார் கேப் ரூ.1,500, இந்தியா முழுவதும் மற்றும் தென் இந்தியா பெர்மிட் சுற்றுலா மேக்ஸி கேப் ரூ.2,300 ஆக உயர்த்தப்படுகிறது. புதுப்பித்தல் கட்டணம் ஆட்டோவிற்கு ரூ.200, சரக்கு வாகனங்களுக்கு ரூ.1,500, ஆம்னி பஸ்களுக்கு ரூ.2,500, டூரிஸ்ட் மேக்ஸி கேப் ரூ.1,200, பள்ளி, கல்லூரி நிறுவன வாகனங்களுக்கு ரூ.500 ஆக உயர உள்ளது.

டைம் ஓவர்
அதேபோல, தாமதமாக புதுப்பிக்கப்படுகிற வாகனங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.. பெர்மிட்டை வேறு பெயருக்கு மாற்றம் செய்தல், இறந்தவருக்கு பதிலாக உறவினர் மற்றும் குடும்பம் சார்ந்த உறுப்பினர்களுக்கு மாற்றம் செய்யவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதைதவிர, பெர்மிட் கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான கட்டணமும் உயர உள்ளது.. வாகனங்களில் 49 வகையான சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்த போக்குவரத்துதுறை முடிவு செய்து அரசுக்கு அனுப்பி உள்ளது... இது விரைவில் அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிய சுமை
இதுகுறித்து சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்க மாநில தலைவர் பால சுப்பிரமணியன் சொல்லும்போது, 4 வருடத்திற்கு முன்பு ஆட்டோ பெர்மிட் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு ரூ.30 ஆயிரம் செலவானது.. ஆனால் இப்போது ரூ.60 ஆயிரம் ஆகிறது. இது ஒரு சுமை.. சாலை பராமரிப்பும் எதுவும் இல்லை. ஆட்டோ கட்டணமும் 9 வருடமாக நிர்ணயிக்கப்படவில்லை.. கட்டணம், அபராதம் மட்டும் அதிகரிக்கப்படுத்தப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தார்,.












Click it and Unblock the Notifications