கலக்கலாக மாற போகும் சென்னை! "எழும்பூர், தாம்பரம்.." இந்த 2 இடத்தை நோட் பண்ணுங்க! வேற லெவல் சம்பவம்
சென்னை: தலைநகர் சென்னையில் உட்கட்டமைப்பே இன்னும் சில மாதங்களில் முழுமையாக மாறப் போகிறது. சென்னைவாசிகளுக்கு பெரியளவில் உதவியாக இருக்கப் போகும் இந்தத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்
நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னையில் பொது போக்குவரத்திற்கு பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கிறது. பஸ், புறநகர் ரயில்கள், மெட்ரோ எனப் பல வகை பொது போக்குவரத்து இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை மற்ற பொது போக்குவரத்தைக் காட்டிலும் மின்சார ரயில்கள் ரொம்பவே முக்கியமானது. புறநகர் ரயில்கள், பறக்கும் ரயில்கள் ஆகியவை சாலைகளில் டிராபிக்கை குறைக்கப் பெரியளவில் உதவுகிறது.

மின்சார ரயில்கள்: இப்போதே ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பேர் இந்த மின்சார ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரயில்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நகரின் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைச் சீரமைப்பது, தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் அமைப்பது. சென்னை-அரக்கோணம் பாதை மின் மயமாக்கல் என பல்வேறு பணிகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எடுத்து வருகிறது. இவை அனைத்தும் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இந்த பணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நார்த்திற்கு எழும்பூர் நிலையம்: குறிப்பாக வட சென்னையில் இருக்கும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 734.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் நில மேம்பாட்டு ஆணையம் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தை ஒவ்வொரு மாதம் பல லட்சம் பேர் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கு நெரிசல் அதிகமாகவே இருக்கிறது.
அதைக் கருத்தில் கொண்டே புதிய நான்கு மாடி முனையக் கட்டிடம், மல்டி லெவல் கார் பார்க்கிங் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுத்திற்கு தாம்பரம் ஸ்டேஷன்: அதேபோல தென் சென்னையில் இருக்கும் தாம்பரத்தில் 1,000 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணியை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இங்கே புதிதாக 6 பிளாட்பார்மகளை கொண்ட டெர்மினல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. அத்துடன் மல்டி லெவல் பார்க்கிங் வசதி, வணிக வளாகம் ஆகியவை கட்டப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாகச் சென்னை - அரக்கோணம் இடையேயான ரயில் பாதையை முழுவதுமாக மின் மயமாக்கும் நடவடிக்கை 1,200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை- அரக்கோணம் இடையே உள்ள 100 கிமீ நீளப் பகுதியை மின் மயமாக்கும் இந்தத் திட்டமும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதை முழுமையாக மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்தால், இந்த வழியில் ரயில் செல்லும் வேகமும் அதிகரிக்கும்.
ஏன் முக்கியம்: இந்த முக்கிய திட்டங்களின் முடிவடைந்தால் அது தலைநகர் சென்னையில் போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு பெரும் பூஸ்டை தரும். சென்னைக்கான இணைப்பை மேம்படுத்த இது பெரியளவில் உதவும். இத்திட்டங்கள் நிறைவடைந்தால் அவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவை மட்டுமின்றி பேசின் பிரிட்ஜ் அருகில் புதிய மேம்பாலம் கட்டுவது, செங்கல்பட்டு சாலையை அகலப்படுத்துவது, வேளச்சேரியில் புதிய புறநகர் ரயில் நிலையம் கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களை தெற்கு ரயில்வே சென்னையில் மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்தும் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, சென்னையில் பொது போக்குவரத்து மேலும் சிறப்பானதாக மாற்றும். சென்னையில் மெட்ரோ பணிகள் ஒரு பக்கம் படுவேகமாக நடக்கும் நிலையில், ரயில் பணிகளும் முடிந்தால் நகரம் வேற லெவலுக்கு சென்றுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications