ரேஷன் வாங்கியாச்சா? அரிசி அட்டைதாரர்கள் 5ம் தேதிக்குள் வாங்கிடுங்க.. ரேஷன்தாரர்களுக்கு புது சிக்கல்?
சென்னை: தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. இதையடுத்து, தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் பெருத்த கவலைக்கும், கலக்கத்துக்கும் ஆளாகி உள்ளனர்.. என்ன அது?
இந்த போராட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடுகள்: தமிழகத்தில் ரேஷன் கடைகளின் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், ஸ்மார்ட் அட்டைகள் தற்போது பயன்பாட்டில உள்ள நிலையில், பயோமெட்டிரிக் சரிபார்ப்பு முறையும், தற்போது இணைக்கப்பட்டு விட்டது. ஆதார் அட்டை இணைப்பின் வாயிலாக போலி பயனாளிகள் களையெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், பயனாளிகளுக்கு தங்குதடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன.
அதேபோல, நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை சேதாரமின்றியும் தரமாகவும், பாதுகாப்பாகவும் வழங்கும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது..
பாக்கெட் விநியோகம்: அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்களான அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு தலா ஒரு நியாயவிலைக் கடை என சோதனை அடிப்படையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் உணவுப் பொருள்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதுடன், எடை குறைவின்றி விரைவாக குடும்ப அட்டைதாரா்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமானது, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
வேலை நிறுத்தம்: இப்படிப்பட்ட சூழலில், வருகிற செப்டம்பர் 5-ந்தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.. தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார். 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
கோரிக்கைகள்: தமிழக ரேஷன் ஊழியர்களை பொறுத்தவரை, அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை, நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..
அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உட்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களையும், மாவட்டங்களில் முன்னெடுத்து வருகிறார்கள்..
ரேஷன் அட்டைகள்: எனினும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.. அந்தவகையில், இப்போது மறுபடியும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தை அறிவித்திருப்பது, ரேஷன்தாரர்களுக்கு கலக்கத்தை தந்துவருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications