அமலுக்கு வரப்போகும் மெகா திட்டம்.. ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. இனி எல்லாமே ஈஸி.. அடிதூள்!
சென்னை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை 01.10.2020 முதல் அமல்படுத்துவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.

பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினை 01.10.2020 முதல் அமல்படுத்துவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசாணையில் என்ன இருக்கிறது?
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி, பொருட்களைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கான பொருட்களை கைவிரல் ரேகை படிப்பி அங்கீகரித்தல் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு விநியோகம் செய்யப்படும் போது இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையினை வசூல் செய்ய வேண்டும் எனவும் இது வேறு மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 01.10.2020 முதல் தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டு-ஐ தவிர பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களின் இருப்பினை கண்காணித்து, போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இத்திட்டம் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகள்/ வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்களைப் பெற ஏதுவாக, தங்களது உறவினர்கள்/ தெரிந்தவர்களை நியமித்து உரிய படிவத்தில் அந்நபர்களுக்கான விவரங்களை அளிக்க வேண்டும், அவர்கள் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள் முடியும்.
மேலும், 01.10.2020 முதல் தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டு-ஐ பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான அத்தியாவசியப் தவிர பொருட்களைப் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.

எனவே. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களின் இருப்பினை கண்காணித்து, போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இத்திட்டம் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள்/ வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருட்களை பெற தங்களது உறவினர்கள்/ தெரிந்தவர்களை நியமித்து பொருட்களைப் பெற ஏதுவாக உரிய படிவத்தில் அந்நபர்களுக்கான விவரங்களைப் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் அளிக்க வேண்டும்.
அவ்வாறு பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்/ உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அந்நபர் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் பெறப்படும் ஒருமுறை கடவுசொல் மூலம் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வயது முதிர்ந்தோர் / மாற்றுத் திறனாளிகளுக்காக அவர்களால் நியமனம் செய்யப்படும் நபர்களிடம் வழங்கப்படும் பொருட்களுக்கு தனியே பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும், நியாயவிலைக் கடை விற்பனையாளர்களை புலம் பெயர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் அணுகும் போது எதிர்மறையான பல காரணங்களை கூறி கட்டுப்பாட்டு பொருட்கள் வழங்கப்படுவது மறுக்கப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இது உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் மற்றும் பதிவாளரால் தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்ட பின்னரும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அதனை முறையாக கண்காணிக்கத் தவறியதையும் காட்டுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை உடனடியாக அனைத்து கீழ்நிலை அலுவலர்களுக்கும் தொடர்புறுத்தி, தகுதியுள்ள எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படக் கூடாது என்று அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டமானது இடர்பாடுகள் ஏதுமின்றி சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கட்டுப்பாட்டுப்
பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதையும் தகுதியுள்ள அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் மறுக்கப்படாமல் வழங்கப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுமாறும்
கேட்டுக் கொள்கிறேன்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ஏதாவது நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்கப்பட மறுப்பதாக புகார்கள் வரப்பெற்றால் சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீதும் தொடர்புடைய ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
-
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications