சீமானுக்கு பெரும் பின்னடைவு-ஊர் ஊராக நீதிமன்ற படியேறனும்..பெரியார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழரின் தந்தை பெரியாரை இழிவாக விமர்சித்ததால் தமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது சீமானுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தந்தை பெரியாரை மிக இழிவாக விமர்சித்து மேடைகளில் பேசினார். தந்தை பெரியார், தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதி அல்ல.. சீரழித்தவர் என்றார். பெரியார், தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார். தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தார்; தமிழ்நாட்டு பெண்களை விரும்பிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என தவறாக வழிநடத்தினார் என ஆதாரமே இல்லாமல் பொய்யாக பேசினார் சீமான்.

இதன் உச்சமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தந்தை பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தயாரித்து கொடுத்த வெடிகுண்டுகளை வீசுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார் சீமான்.
சீமானின் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல மதுரை உள்ளிட்ட நகரங்களில் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டன; இதனடிப்படையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு நேரிலும் சம்மன் கொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தம் மீது தொடரப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
சீமானுக்கு இது மிகப் பெரும் பின்னடைவாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தற்போதைய நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சீமான் நேரில் சென்று ஆஜராக வேண்டிய கடும் நெருக்கடியும் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications