TVK: செங்கோட்டையன் மட்டுமல்ல.. இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த நிர்வாகிகள் யார் யார்?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று (நவம்பர் 26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். அதனைத்தொடர்ந்து மாலையில் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார் செங்கோட்டையன். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் வைத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இன்று காலை 9 மணியளவிலேயே விஜய் பனையூர் அலுவலகம் வந்த நிலையில், தவெக நிர்வாகிகளும், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் முன்கூட்டியே வருகை புரிந்தனர். காலை 10 மணியளவில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசினார்.
பின்னர் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட 50க்கும் மேற்பட்டோரும் தவெகவில் இணைந்தனர்.
முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கோட்டையனுடன் தவெக-வில் இணைந்துள்ளனர்.
மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் விஜய் முன்னிலையில் இன்று தவெக -வில் இணைந்துள்ளார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் பாஜக-வில் இணைந்துள்ளார். இன்று 100க்கும் மேற்பட்டவர்கள் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர்.
-
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்











Click it and Unblock the Notifications