இன்று காணும் பொங்கல்.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: இன்று காணும் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் நாளன்று எப்போதும் சென்னைவாசிகள் மெரினா கடற்கரைக்கு அதிகளவில் வருவார்கள். இந்தாண்டும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காமராஜர் சாலை, கண்ணகி சிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல், மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் காணும் பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.. காணும் பொங்கல் நாளில் எப்போதும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களுக்குச் செல்வது வழக்கம்.

காணும் பொங்கல்:
சென்னையைப் பொறுத்தவரைப் பொதுமக்கள் அதிகளவில் மெரினா கடற்கரையில் ஒன்றுகூடுவார்கள். இந்தாண்டும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்பட்டுள்ள சூழவில், முக்கிய சுற்றுலா தளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்:
இது தொடர்பாகச் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாகக் காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாகச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொது மக்கள், அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரைச் சாலை) அதிகரிக்கும் போது போர் நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாகக் கட்டாயமாகத் திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கவனம்
வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை. பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்) கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாகச் செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி ஆகவும் செயல்படும்.
காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 13.00 மணி (மதியம் 1 மணி முதல்) முதல் 22.00 மணி (இரவு 10 மணி வரை) வரை அனுமதிக்கப்படாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications