ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்.. வார் ரூமை திறக்கவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை!
சென்னை: நாடு முழுக்க உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. ஆக்சிஜன் கையிருப்பு போதுமான அளவு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. வரும் நாட்களில் கேஸ்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்புகள் உயர்ந்து வரும் நிலையில் நாடு முழுக்க மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டாம் அலையில் ஏற்பட்டது போல மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆக்சிஜன் கையிருப்பு
இந்த நிலையில்தான் தினசரி கேஸ்கள் உயர்வதை அடுத்து மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரஷாந்த் பூஷன் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்
குறைந்தது 48 மணி நேரங்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையில் ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.ஆக்சிஜன் செறிவூட்டிகள், திரவ ஆக்சிஜனும் தயாராக இருக்க வேண்டும். நாடு முழுக்க இரண்டாம் அலைக்கு பின் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் உயர்த்தப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்த உற்பத்தி மையங்கள் அனைத்தும் இப்போது செயல்பட வேண்டும்.

ஆக்சிஜன் சிலிண்டர்
அனைத்தும் முழு உற்பத்தியை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பது மட்டுமின்றி அதை வேகமாக நிரப்பும் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். வாகனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்ல தயாராக இருக்க வேண்டும். அதேபோல் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், ஐசியு வார்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வாரியாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்து இருங்கள்.

மாவட்ட ரீதியாக பாதுகாப்பு
மாநில சுகாதார செயலாளர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக இயக்கப்பட்டு வந்த கண்ட்ரோல் ரூம்கள் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். ஆக்சிஜன் இருப்பை எல்லா மாநிலங்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
Recommended Video

ஆக்சிஜன்
மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தங்களின் ஆக்சிஜன் கையிருப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொண்டு இருக்க வேண்டும். இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். குறைந்தது 48 மணி நேரங்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையில் ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும்., என்று இந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications