கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிங்க - நடிகர் விவேக்
அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விவேக் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு என்று கூறினார்.

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். இந்தியாவில் ஒரு நாளுக்கு 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 7,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியும் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது.

தடுப்பூசி மேல் பழி போட வேண்டாம்
இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும். அதுவரை நாம் பாதுகாப்பில்லாமல் இருந்து கொரோனா வந்தால் நாம் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் நாம் இருக்க வேண்டும்.

பக்க விளைவு இல்லை
அரசு மருத்துவமனைகளில் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். அவர்களை நம்பி பொதுமக்கள் அனைவரும் சீக்கிரமாக கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும். நானும் அரசு மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். ஊசி போட்டது போலவே தெரியவில்லை எந்த வலியும் இல்லை. யாருக்கும் எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதுதான் அரசுத் தரப்பில் சொல்லப்படும் தகவல். சமூகப் பாதுகாப்புக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications