கமல்ஹாசன் கார் மீது கடுமையான தாக்குதல்.. பிடிபட்ட வாலிபருக்கு தர்ம அடி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
சென்னை: காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் கார் மீது பெரும் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக, திமுக மட்டுமின்றி மக்கள் நீதி மையம் கட்சி தீவிரம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் வேட்பாளர்
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோபிநாத் என்ற வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு கோபிநாத்தை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். காந்தி ரோடு பகுதியில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு நிறைய பேர் கூடியிருந்தனர்.

கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்
அப்போது நீண்ட தலைமுடியும், லேசான தாடியும் வைத்த ஒரு இளைஞர் கமல் காரை நோக்கி வர முற்பட்டார். அப்போது கமல்ஹாசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பவுன்சர்கள் அவரை விலக்கி விடுவதற்கு முற்பட்டனர். ஆனால் அவர்களையும் மீறி கமல்ஹாசன் கார் முன் பகுதிவரை வந்த அந்த வாலிபர் வந்து கார் கண்ணாடி மீது தாக்குதல் நடத்தினார். இதில் கண்ணாடியில் ஓரளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரத்தம் வரும் வரை அடி
இந்த நிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர். இதில் அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இதைப்பார்த்த பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடத்திய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறு ஏதேனும் அரசியல் காரணம் இருக்கிறதா என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் காயமின்றி தப்பினார்
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக கமல்ஹாசன் காயமின்றி தப்பினார். தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில் ஒரு கட்சி தலைவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கண்டனம்
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகரான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயுரா தனது டுவிட்டர் பக்கத்தில், காஞ்சிபுரத்தில் எங்கள் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து தாக்க முயன்றவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேர்மையின் பயணத்தை குள்ளநரித்தனத்தால் எதிர்கொள்பவர்களைக் கண்டு அஞ்சமாட்டோம். தலைவரின் இடிமுழக்கம் நாளை கோவையில். விரைவில் கோட்டையில். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications