ஸ்ருதி ஹாசன், அக்ஷராவுடன் காலையிலேயே வாக்குச் சாவடி வந்த கமல்ஹாசன்! ஆழ்வார்பேட்டையில் ஓட்டு போட்டார்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது மகள்களுடன் காலையிலேயே வந்து வாக்குப் பதிவு செய்தார்.
திமுக மற்றும் அதிமுக அல்லாத கூட்டணியை ஏற்படுத்தியிருந்தது மக்கள் நீதி மய்யம்.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். ஆனால், கமல்ஹாசன் வீடு சென்னையில் இருப்பதால் அங்கு தான் அவருக்கு ஓட்டு இருக்கிறது.

மகள்களுடன் வருகை
எனவே இன்று காலை 7:20 அளவில் ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் வருகை தந்திருந்தார். வரிசையில் காத்திருந்து வாக்குச்சாவடியில் அவர் வாக்கை பதிவு செய்தார்.

ஸ்ரீபிரியா ஓட்டு
இதே வாக்குச் சாவடியில், நடிகையும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியுமான ஸ்ரீபிரியாவும் வருகை தந்து வாக்குப் பதிவு செய்தார். அப்போது கூட்டத்தில் வரிசையில் காத்திருந்த சில வாக்காளர்கள் கமல்ஹாசனுடன் பேச்சுக் கொடுத்ததை பார்க்க முடிந்தது.

பேட்டியில்லை
வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது நிருபர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்ப முற்பட்டனர். ஆனால் கமல்ஹாசன் பதில் சொல்லவில்லை. அங்கிருந்து கிளம்பி விட்டார். செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார்.

கூட்டணி
மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications