Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனித முரண்பாடுகளுக்கு குண்டுவெடிப்பு தீர்வல்ல…. இலங்கை சம்பவம் குறித்து கமல்ஹாசன் டுவீட்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இலங்கை சம்பவம்: ரஜினி, கமல் கருத்து

    சென்னை:இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம், மனித முரண்பாடுகளுக்கு ஒரு போதும் இறுதி தீர்வு அல்ல என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.

    இலங்கையில் இன்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் தெஹிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது.

    Makkal needhi maiam kamalhaasan condolence about srilanka blast issue

    குண்டு வெடிப்பு சம்பவங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஊரடங்கு உத்தரவும் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும், தலைவருமான நடிகர் கமல்ஹாசனும் இரங்கல் வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது: வன்முறை ஒருபோதும் மனித முரண் பாடுகளுக்கு இறுதி தீர்வு அல்ல. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீதி வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரைவாக வகையில் செயல்படும்படி இருக்க வேண்டும் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+