சமூகத்தின் பல்வேறு பிரிவையும்.. வேட்பாளர்களாக்கி அழகு பார்த்த கமல்.. யார் இந்த "சகலகலா வல்லவர்கள்"?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்தால் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, தொழிலதிபர்கள் என பலதரப்பட்டவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளார்.
கமல்ஹாசன் என்றாலே வித்தியாசம், புதுமையை புகுத்துவதில் வல்லவர் என்பது சினிமா துறை மூலம் நமக்கு தெரியும். ஆனால் அதே கமல் அரசியல் அரிதாரத்தை பூசியுள்ள நிலையில் அவரது அரசியல் பாதை எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததை விட தமது "ஆவ்சம்" செயல்பாடுகளின் மூலம் மக்களே சபாஷ் என சொல்லவைத்தார். கட்சியின் பெயர், கொடி தேர்வு என அனைத்திலும் சகலகலா வல்லவனாக இவரது தேர்வு இருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது அவரும் வழக்கம் போல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எத்தனை சி
ஆனால் அவரோ தனித்து போட்டி என அறிவித்துவிட்டார். இதையடுத்து வேட்பாளர்களிடம் நேர்காணலையும் வழக்கமாக கட்சிகள் கேட்பது போல் எத்தனை "சி" செலவு செய்வாய் என கேட்காமல் மக்களுக்கு என்ன செய்வாய் , இதுவரை என்ன செய்துள்ளாய் என கேட்டார்.

எதிர்பார்ப்பு
அதுமட்டுமா, நேர்காணலில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, பத்திரிகையாளர் மதன், திரைப்பட நடிகை கோவை சரளா உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்திருந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வேட்பாளர்கள்
அதில் மொத்தம் தலா 3 டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், 8 தொழிலதிபர்கள், ஒரு பட்டதாரி. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என மொத்தம் 21 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

வொர்க் அவுட் ஆகுமா
இதில் ஹைலைட்டே 8 பேர் தொழிலதிபர்கள் என்பதுதான். பரம்பரை பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மக்கள் பணத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள் என்பது கமல் கணக்கு. இது வொர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications