ராஜ்யசபா சீட்டை வேணாம்னு சொல்லி இருக்கணும்.. கமல்ஹாசன் முடிவுக்கு எதிராக கொந்தளித்த மநீம வினோதினி!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை என அறிவித்து, திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் மட்டும் பெற்றுள்ளதற்கு கட்சிக்குள் அதிருப்தி வெடித்துள்ளது. நடிகை வினோதினி இதுதொடர்பாக வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வினோதினி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வினோதினி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்ததைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்திற்கும், கமல்ஹாசனுக்கும் ஆதரவாக சமூக வலைதளத்தில் களமாடி வருகிறார் வினோதினி வைத்தியநாதன்.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்: இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. மக்கள் நீதி மய்யம் கேட்ட சீட்களை ஒதுக்க திமுக சம்மதிக்காத நிலையில், இறுதியாக 1 ராஜ்யசபா சீட் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்றும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் மநீம பிரச்சாரம் செய்யும் என்றும், அதற்கு கைம்மாறாக, கமல் ஹாசனின் மநீமவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவது என்றும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் நேற்று கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.
மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? போட்டு உடைத்த கமல்ஹாசன்
நாட்டு நலனுக்காக இந்தக் கூட்டணி: அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது கட்சியும் அப்படித் தான். அதே நேரம் இந்தக் கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயமே இல்லை. நாட்டிற்காக எடுக்கப்பட்ட முடிவு" எனத் தெரிவித்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் மநீம 2.6% வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலிலும் அதே அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றது மநீம. கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வெறும் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார்.
மநீம நிர்வாகிகள் கடும் அதிருப்தி: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மநீம பெற்றிருந்தது. மேலும் 2 தேர்தல்களிலும் பல இடங்களில் மூன்றாம் இடத்தையும் பெற்றது. இந்நிலையில், திமுக கூட்டணியில் மநீமவுக்கு லோக்சபா சீட் இல்லை என தெரிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போ வீட்டு நலன்?: இதுதொடர்பாக மநீம கட்சியைச் சேர்ந்த வினோதினி வைத்தியநாதன், வெளிப்படையாகவே கமல்ஹாசனின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். “நாட்டு நலனுக்காக எடுத்த முடிவு இருக்கட்டும். அப்போ வீட்டு நலன்? உதயசூரியன்ல ஓட்டு குத்துங்கனு என்ன சொல்ல வையுங்க பார்ப்போம்.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பலரும் ஏமாற்றத்துடன் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். “இதற்கு மேல்... கட்சியில் இவன் வேலை பார்க்கல அவன் வேலை பார்க்கவில்லை என்று பொதுவெளியில் ஏன் பேசுறேன்னு கேட்டு எவனாவது வந்த அசிங்க அசிங்கமா கேட்பேன்” என மநீம நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மநீம தொண்டர் ஒருவர், “இதை பொழப்பா வச்சுகிட்டு சம்பாதித்தவன் எல்லாம் எவனும் எதுவும் சொல்ல மாட்டான். ஆனால் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொந்த பணத்தைசெலவு பண்ணி இரவு பகல் பாக்காம போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கொண்டு இருந்தான் பாரு.. அவனுக்கு தான் மனசு வலிக்கும். வாட்சப் குழுவில் ஒரு தொண்டன் கருத்து.” என குறிப்ப்பிட்டுள்ளதையும் ரீ-ட்வீட் செய்துள்ளார் வினோதினி.
வினோதினி ட்வீட்: மேலும் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள வினோதினி வைத்தியநாதன், “நம் ஆழ்மனது, உள்ளுணர்வு ஒன்று சரியென்றோ தவறென்றோ சொல்லும், ஆனால் அடுத்தவர்கள் செட் பண்ணும் நரேட்டிவ்வில் போய் மாட்டிக்கொள்வோம். But I’ve believed one thing consistently. Your intuition is always right. நேற்று நான் போட்ட கீச்சுக்கு வந்த எதிர்வினைகளையும், எங்கள் கட்சி கூட்டணி செய்திக்கு வந்த கருத்துக்களையும் இரவு முழுதும் படித்தவண்ணம் இருந்தேன். பொதுவாக மனதை ரொம்ப போட்டு குழப்பிக்காத எனக்கே குழப்பம் வந்துவிட்டது.
ராஜ்ய சபா சீட்டுதான் என்ற சேதி வந்ததும் என் மனதில் வந்த ஃபீலிங்ஸும் கண்ணில் வழிந்த கண்ணீரும் பொய்யா, ராஜ்ய சபா சீட் ப்ளஸ் கூட்டணிக்கு பிரச்சார ஆதரவு அப்படிங்குற முடிவு சரிதானோ, பலர் சொல்வதுபோல் ஸ்மார்ட் மூவோ, மநீமவுக்கு நீண்டகால நோக்கில் நல்லதுதானோ, இதில் உள்ளர்த்தம் இருக்குமோ என்றெல்லாம் யோசனைகள். தூக்கம் தெளிவு தந்தது. நான் நேற்று ஆழ்மனதில் என்ன நினைத்தேனோ அதுதான் சரி.
ராஜ்யசபா சீட்டை தவிர்த்திருக்க வேண்டும்: நாட்டு நலனுக்காக பிரச்சார ஆதரவு சரி. வீட்டு நலனுக்காக (மநீம) ராஜ்ய சபாவைத் தவிர்த்திருக்கணும். லோக்சபா சீட் இல்லையென்றால் வெளியிலிருந்து ஆதரவு மட்டுமே என்பதுதான் நியாயமானது. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள 9 இடங்களில் ஒன்று எங்களுக்கு வந்திருக்கணும். இது அவர்களாகவே எங்களுக்கு குறைந்தபட்சம் செய்திருக்க வேண்டும். எவ்வளவு gaslight பண்ணினாலும் இதுதான் என் கருத்து.
எங்களுக்கு ராவான டீல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சமாளிப்போம். நமக்கு கிடைத்துள்ள கார்டுகளுடன் விளையாடுவோம். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் எத்தனையோ சோதனைகளை நம் தலைவர் பார்த்திருக்கிறார், இது புதிதல்ல. எங்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸுக்குத்தான். இப்போதைக்கு இதை விட்டுவிடுகிறேன். மய்யத்தினருக்கு, தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் விதமாக வேலைகளைத் தொடர்வது சாலச்சிறப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.
கமல் விளக்கம்: இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் இன்று வீடியோ வாயிலாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் பேசியுள்ள கமல்ஹாசன், "எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று தெரிவித்துள்ளார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications