மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? போட்டு உடைத்த கமல்ஹாசன்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ வாயிலாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முதல் ஆளாக முடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதில், விசிக - 2 , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 ,
திமுக கூட்டணி கட்சிகள்: மதிமுக - 1 ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 மற்றும் புதுவையில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் நீண்ட நாட்களாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்த மக்கள் நீதி மய்யத்திற்கு கடைசியில் திமுக கூட்டணியில் லோக்சபா தொகுதி கிடைக்கவில்லை. மாறாக ஒரு ராஜ்ய சபா சீட்டை மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒதுக்கியது.
ஒரு ராஜ்யசபா தொகுதி மட்டும்: தென் சென்னை, மதுரை, கோவை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிடக் கமல் விரும்பியதாகவும் இதனையே திமுகவிடம் கமல்ஹாசன் வலியுறுத்தியதாகவும், இருப்பினும், திமுக தரப்பு அதற்கு உடன்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான், திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் நேற்று கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டனர். லோக்சபா தேர்தலில் எப்படியாவது ஒரு சீட்டை பெற்று விட வேண்டும் என்று விரும்பிய கமல்ஹாசனுக்கு இது ஏமாற்றமாகவே பார்க்கப்பட்டது. முன்னதாக தொகுதி பங்கீடு முடிந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கமல்ஹாசனும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
நடிகை கஸ்தூரி விமர்சனம்: அப்போது கமல்ஹாசன் கூறியதாவது:- "இந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது கட்சியும் அப்படி தான். அதே நேரம் இந்தக் கூட்டணிக்கு எங்கள் ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயமே இல்லை. நாட்டிற்காக எடுக்கப்பட்ட முடிவு" என்றார். எனினும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு லோக்சபா தொகுதி ஒதுக்கப்படாததை நடிகை கஸ்தூரி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் விமர்சித்து இருந்தனர்.
கமல்ஹாசன் விளக்கம்: இந்த நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் இன்று வீடியோ வாயிலாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- "எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications