கோவை சிறுமி வழக்கில் 21 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல்.. தடதடக்கும் வழக்கு
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக புகார் உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்று 21 நாட்களாகியுள்ள நிலையில், கோவை சிறுமி வழக்கில் போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மே மாதம் 21 ஆம் தேதி 10 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றதில் கார்த்திக் கால் உடைந்தது.

சிறுமி வழக்கு
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறை 3 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்து விரிவான தகவல்கள், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தடயவியல் அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளை விரைவாகப் பெற்று, நீதிமன்றத்தில் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளில் காவல்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். ஜூன் 12 ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சிறுமி வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் சிறுமி வழக்கில் விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்து, பெரிய தண்டனை வாங்கித்தர அரசு உத்தரவிட்டது. இதனால் காவல்துறை இந்த வழக்கில் தீவிரமாக பணியாற்றி வந்தனர்.
குற்ற பத்திரிகை தாக்கல்
சம்பவம் நடந்து சரியாக 21 நாட்களாகியுள்ள நிலையில், இன்று குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 819 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை, இ பைலிங் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் விரைவில் குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் விரைவாக வழக்கு விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications