இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியனில் உருவான மிக பெரிய சூரிய புயல் இப்போது பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது. இது இன்னும் சில மணி நேரத்தில், அதாவது நள்ளிரவில் பூமியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் வானில் பல கலர்களில் அரோரா தோன்றும்.

கடந்த ஒரு வாரமாகவே சூரியன் சற்றே ஓய்வில்லாமல் தகித்து வருகிறது. தொடர்ச்சியாகப் பல வெடிப்புகளையும், காந்த வாயுக்களையும் விண்வெளியில் உமிழ்ந்து வந்த சூரியன், இன்று (திங்கள்கிழமை) பூமிக்கு நேரடியாக ஒரு மிக பெரிய விண்வெளி வெடிப்பை அனுப்பியுள்ளது. சூரியனின் 'ஆக்டிவ் ரீஜியன் 4461' (Active Region 4461) என்ற பகுதியில் இருந்து கடந்த ஜூன் 6ம் தேதி காலையில் உருவான ஒரு பயங்கர வெடிப்பு, தற்போது பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

space India sun

ஆய்வாளர்கள்

விண்வெளி விஞ்ஞானிகள் இதனை 'M1.8' ரகச் சூரிய வெடிப்பு (Solar Flare) என்று வகைப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து கிளம்பியுள்ள காந்த இழை போன்ற அடர்த்தியான பிளாஸ்மா மேகம், தற்போது மணிக்கு 1,400 கிலோமீட்டர் என்ற வேகத்தில் பூமியின் காந்தப்புலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சூரியனை 24 மணி நேரமும் கண்காணித்து வரும் அமெரிக்காவின் விண்வெளி வானிலை கணிப்பு மையம் மற்றும் நாசா ஆகிய அமைப்புகள், பூமிக்கு 'G3' ரகக் காந்தப் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளன. சூரிய புயலின் தீவிரம் G1 முதல் G5 வரை அளவிடப்படும் நிலையில், G3 என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு புயலாகும்.

சூரியனின் காந்த கோடுகள் சட்டென கட் ஆகி மீண்டும் இணையும்போது ஏற்படும் இந்த வெடிப்பு, கடந்த ஜூன் 6ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:10 மணியளவில் எக்ஸ்-ரே கதிர்களை உமிழ்ந்து பூமியின் ரேடியோ அலைவரிசைகளில் சற்றே பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது அதன் தொடர்ச்சியாக பில்லியன் டன் எடையுள்ள காந்த பிளாஸ்மா மேகம் பூமியைத் தாக்கவுள்ளது.

வெடிப்பு

சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவில், ஒரு பெரிய மின்சாரப் பாலம் போல இந்த இழை தொங்கி கொண்டிருக்கும். சுற்றியுள்ள பகுதிகள் கோடிக்கணக்கான டிகிரியில் கொதித்தாலும், இந்த இழை வெறும் 5,000 முதல் 10,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்ட ஒரு குளிர்ந்த வாயு பகுதியாகவே இருக்கும்.

சூரியனின் காந்தக் கூண்டு உடைந்ததால், இந்த அடர்த்தியான காந்த வாயு விண்வெளியில் வீசப்பட்டு, தற்போது பூமியின் காந்தக் கேடயத்தைத் தாக்கவுள்ளது. விண்வெளி விஞ்ஞானி டாக்டர் தமிதா ஸ்கோவ், இதனை மிகத் துல்லியமான சூரிய வெடிப்பு என்று குறிப்பிட்டு, வானில் அரங்கேறப் போகும் அதிசயத்தைக் காணத் தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அரோரா

இந்தக் காந்த மேகம் பூமியைத் தாக்கும்போது, பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகளில் 'அரோரா' எனப்படும் கண்கவர் விண்வெளி ஒளி நடனம் நிகழும். இந்த முறை காந்தப் புயலின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வழக்கமாகத் துருவப் பகுதிகளில் மட்டுமே தெரியும் இந்த பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிற ஒளிக் கற்றைகள், இந்த முறை சற்றே தெற்கு நோக்கி நகர்ந்து தெரிய வாய்ப்புள்ளது.

கடந்த 2024 மே மாதத்தில் ஏற்பட்ட G5 புயலின் போது இந்தியாவின் லடாக் வரை இந்த அரோரா ஒளி தெரிந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல், இந்த 'G3' புயலின் தாக்கத்தால் இன்று திங்கள் கிழமை இரவு வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில்.. இந்தியாவின் வடக்குப் பகுதிகள் (லடாக், இமயமலைப் பகுதிகள்), மத்திய ஐரோப்பா, அமெரிக்காவின் வட பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் தெற்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த அதிசய விண்வெளி ஒளியைக் காண முடியும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

எப்போது தெரியும்

இந்தச் சூரியப் புயல் பூமியில் எந்தளவுக்குப் பிரகாசமான ஒளியை ஏற்படுத்தும் என்பது, 'Bz' எனப்படும் தெற்கு நோக்கிய காந்த விசைப் பாகத்தைப் பொறுத்தே அமையும். அது பூமியின் காந்தப்புலத்திற்கு நேர் எதிராக இணையும் போதுதான் விண்வெளி எனர்ஜி பூமிக்குள் நுழைந்து அரோரா ஒளியை உருவாக்கும். பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செயற்கைக்கோள்கள் இதை கடக்கும்போதுதான், அதாவது பூமியை தாக்குவதற்கு 15 முதல் 60 நிமிடங்களுக்கு முன்புதான் இந்த ஒளியின் முழுமையான தீவிரம் நமக்குத் தெரியவரும். இதை காண உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் உற்று நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+