சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. முக்கியமான சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ ரயில் பாதை பணிக்காக எல்.பி. சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி முதல் எம்.ஜி. சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளதால் நாளை (27 ஆம் தேதி) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலத்தடி பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜூன் 27 (சனிக்கிழமை) முதல் எல்.பி. சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி-எம்.ஜி. சாலை சந்திப்பு வரை போக்குவரத்து முழுமையாக மூடப்படுகிறது.

Chennai Traffic Alert

திருவான்மியூரில் இருந்து திரு.வி.க பாலம் நோக்கிச் செல்லும் அனைத்துப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எல்.பி-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து எம்.ஜி. சாலை → சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை → சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும்

பெசன்ட் நகரில் இருந்து 7வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள் எம்.ஜி. சாலையில் வலதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 1வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும்.

எல்.பி. சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ → 11வது குறுக்கு சாலை → 8வது குறுக்கு சாலை → 10வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி. சாலையை அடைந்து தங்களது இலக்கைச் செல்ல வேண்டும்.

திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் இலகுரக மற்றும் பிற வாகனங்கள் எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2வது அவென்யூ 1வது பிரதான சாலை → 1வது அவென்யூ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும்.

சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை-எம்.ஜி. சாலை- எல்.பி. சாலை மற்றும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ -1வது பிரதான சாலை பகுதிகள் தற்காலிகமாக இருவழிப் பாதைகளாக மாற்றப்படுகின்றன.

சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி ஒருவழிப் பாதையாகவும், 11வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி ஒருவழிப் பாதையாகவும் செயல்படும். இந்திரா நகர் 2வது அவென்யூவில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு நல்குமாறும் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+