இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்டிரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஏழை எளிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இது குறித்த நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் அனைத்து மக்களும் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த தொடங்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிக முக்கியமான ஒரு திட்டம் தான் "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டம். இதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான குடும்பங்களுக்கு விலையில்லா கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

gas cylinder LPG

உஜ்வாலா

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 10.58 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் இணைப்புகளைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மாணிய விலையில் கேஸ் சிலிண்டர தரப்படும். உஜ்வாலா பயனாளிகள் வெறும் 642 ரூபாய் மட்டுமே செலுத்தி கேஸ் சிலிண்டர் பெறலாம்.

4 சிலிண்டர்கள்

இந்தச் சூழலில் தான் திங்கள் இரவு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை உஜ்வாலா திட்ட பயனாளர்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஜூன் 7ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அந்த செய்திக்குறிப்பில், "ஒரு உஜ்வாலா பயனாளர் ஆண்டுக்கு முதல் நான்கு சிலிண்டர் ரீஃபில்களுக்கு தலா ₹300 நேரடிப் பணப்பரிமாற்ற மானியத்தைப் பெறுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்

மத்திய அரசு இந்த முடிவை எடுப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சராசரி உஜ்வாலா பயனாளி ஆண்டுக்கு சுமார் 4 சிலிண்டர்களை மட்டுமே பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அந்த சராசரி பயன்பாட்டிற்கு ஏற்ப மானிய வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு இந்தியாவையும் பாதிக்கிறது.

கடந்த 2022 மே மாதம் உஜ்வாலா பயனாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ₹200 மானியம் அறிவிக்கப்பட்டது.. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த மாணியம் வழங்கப்பட்டது.

2023 அக்டோபரில் இந்த மானியத் தொகை ₹200-லிருந்து ₹300-ஆக உயர்த்தப்பட்டது. அப்போதும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்பட்டது.

2025 ஆகஸ்ட் மாதம் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12லிருந்து 9-ஆகக் குறைக்கப்பட்டது.

2026 ஜூன் மாதம் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 9லிருந்து 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மானியம்

இப்போது ஒரு சிலிண்டரை விநியோகம் செய்வதற்கான அடக்க விலை தற்போது ₹1,600க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.. இருப்பினும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு மானியம் வழங்கி வருகிறது. சாதாரண நுகர்வோருக்கு ₹942க்கும் உஜ்வாலா பயனாளிகளுக்கு ₹642க்கும் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

இப்போது சிலிண்டர் வரம்பு குறைக்கப்பட்டுள்ள சூழலில், ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தும் உஜ்வாலா பயனாளர்கள், 5வது சிலிண்டரிலிருந்து சந்தை விலையிலேயே (சாதாரண நுகர்வோர் வாங்கும் விலையில்) சிலிண்டர்களை வாங்க வேண்டியிருக்கும். அதாவது முதல் 4 சிலிண்டர்களுக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைத்து வந்த ₹300 கூடுதல் மானியம் கிடைக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+