சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிம்ம சொப்பனம்.. கமலை பாருங்க.. போகிற இடமெல்லாம் திமுகவிற்கு செக்.. மநீம அடித்த ஹெலிகாப்டர் ஷாட்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.. எதிர்க்கட்சியான திமுகவிற்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மிக முக்கிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடுகிறது. மூன்றாவது கூட்டணியை கமல்ஹாசன் மிகப்பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறார்.

5 மாநில தேர்தல்.. 22 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் எந்த மாற்றமும் இல்லை! 5 மாநில தேர்தல்.. 22 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் எந்த மாற்றமும் இல்லை!

இந்த சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் கூட்டணி 8%க்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக தற்போது மக்களை நீதி மய்யம் மாறியுள்ளது.

எப்படி

எப்படி

திமுக எந்த பக்கம் சென்றாலும் அங்கு கேட் போட்டு செக் வைப்பதே தற்போது மக்கள் நீதி மய்யத்தின் யுக்தியாக உள்ளது. பல வருடம் அரசியலில் இருந்தவர் போல மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார். திமுக மீது கமல்ஹாசன் வைத்து வரும் நேரடி விமர்சனங்களில் இருந்துதான் இந்த மோதலே தொடங்கியது. வீல் சேர் விமர்சனம் சர்ச்சையான நிலையில்.. ஸ்டாலினை கமல் நேரடியாக பல மேடைகளில்ஸ்ஸ் விமர்சனம் செய்தார்.

விமர்சனம்

விமர்சனம்

ஒருபக்கம் ஸ்டாலினை விமர்சனம் செய்து கொண்டே இன்னொரு பக்கம் திமுகவிற்கு மாற்றாக மூன்றாவது அணியை வலிமையாக உருவாக்கினார். இதுதான் திமுகவிற்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தது. அதோடு திமுகவிடம் இருந்து காங்கிரசை பிரிக்கவும் கூட மநீம முயன்றது. இதெல்லாம் போக இன்னொரு பக்கம் திமுகவிற்கு எதிராக மிகவும் வலிமையான வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் களமிறக்கியது. மக்களுக்காக களத்தில் போராடும் நபர்களை தேடி பிடித்து மக்கள் நீதி மய்யம் களமிறக்கியது.

வாக்குறுதி

வாக்குறுதி

இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யத்தின் வாக்குறுதிகளை திமுக காப்பி அடித்துவிட்டதாக கமல்ஹாசன் நேரடியாகவே குற்றஞ்சாட்டி இருந்தார் . இந்த நிலையில் தற்போது அதிமுக, திமுகவிற்கு இணையாக மக்கள் நீதி மய்யத்தின் வாக்குறுதியும் மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் கேன்டீன், இலவச லேப்டாப், பெண்களுக்கு உதவித் தொகை என்று கமல்ஹாசன் பல வலிமையான முற்போக்கான திட்டங்களை களமிறக்கி உள்ளார்.

திமுக

திமுக

திமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்பதை கமல்ஹாசன் பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். கமல்ஹாசன் அதிமுகவிற்கு எதிராகவும் பல இடங்களில் பேசி இருக்கிறார். அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் தமிழகத்தில் திமுகவிற்கு மாற்றாக, அதிமுகவை எதிர்க்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துள்ளது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

அதிமுகவின் அரசுக்கு எதிராக செல்லும் அதிருப்தி வாக்குகள் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் திமுகவிற்கு மட்டும் செல்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கும் சென்று பிரிய வாய்ப்புள்ளது. கடந்த முறை அரசுக்கு எதிரான வாக்குகள் எப்படி மக்கள் நல கூட்டணிக்கு சென்று வாக்குகள் பிரிந்ததோ அதேபோல் இந்த முறையும் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆதரவு

ஆதரவு

முக்கியமாக கொங்கு மாவட்டங்கள்,சென்னையில் சில தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மிகவும் வலிமையாக இருக்கிறது. இதனால் திமுகவின் வாக்குகளை மிக அதிக அளவில் மக்கள் நீதி மய்யம் பிரிக்க வாய்ப்புள்ளது. சில தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பை கூட மக்கள் நீதி மய்யம் பறிக்க வாய்ப்புகள் உள்ளன. மக்கள் நீதி மய்யம் 8-9% வாக்குகளை இந்த தேர்தலில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகள்

வாக்குகள்

8-9% வாக்குகள் என்றால் அது கண்டிப்பாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.இதன் மூலம் பல தொகுதிகளில் கமல்ஹாசன்தான் கேம் சேஞ்சராக இருக்க போகிறார். திமுகவிற்கு இப்போதே இதனால் கொஞ்சம் கலக்கம் ஏற்பட்டுள்ளது. 2016 போல ஆகி விடுமோ என்ற அச்சத்தில் திமுக உள்ளது.

English summary
Makkal Needhi Maiam will be a spoiler for DMK in many constituencies in TN assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X