சென்னையில் வரும் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு.. கமல்ஹாசன்
சென்னை: சென்னையில் வரும் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், மக்கள் நீதி மய்யத்தின் மகத்தான தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையிலும் பிரம்மாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21 தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மண்ணையும், மொழியையும் மக்களையும் காக்கவே நாம் களம் இறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்குத் தடையல்ல நாம் ஒரு போதும் துவளும் படையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்த்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டிற்கு அணி திரள வேண்டும். உங்கள் உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம்சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடை சூழ பிப்ரவரி 21ம்தேதி சென்னை நோக்கி அலை அலையாகத் திரண்டு வாருங்கள்.
பழி போடும் அரசியல், பழி வாங்கும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வழி தேடும் அரசியல வழிகாட்டும் அரசியலுக்கு துவக்க உரையை சேர்ந்து எழுதுவோம். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே என்று கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications