லோக்சபா தேர்தல்:திமுக அணியில் ஐக்கியம்? கமல்ஹாசன் தலைமையிலான இன்றைய மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணையவே அதிக சாத்தியங்கள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன. சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

லோக்சபா தேர்தல் 2024-ல்தான் நடைபெறுகிறது என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆளும் திமுக தலைமையில் ஏற்கனவே மெகா கூட்டணிஅமைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வலுவான திமுக கூட்டணி

வலுவான திமுக கூட்டணி

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் இருந்து எந்த ஒரு கட்சியும் வெளியேறும் நிலையில் இல்லை. ஆனால் தொகுதிப் பங்கீட்டின் போது எப்படியும் திமுக கூட்டணியில் சிக்கல் வரும்; ஒருசில கட்சிகள் வெளியே வரும்; அந்த கட்சிகளை இணைத்து மெகா கூட்டணிக்கு முயற்சிக்கலாம் என்பது அதிமுக இபிஎஸ் கோஷ்டி தலைவர்களின் கணக்கு. இதற்கான சாத்தியங்கள் கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை; மாநில கட்சிகளைப் பொறுத்தவரை சட்டசபை தேர்தல்தான் முக்கியம்; சட்டசபை தேர்தலிலேயே கூட்டணி கட்சிகளை லாவகமாக கையாண்டது திமுக. லோக்சபா தேர்தலிலும் அதே பாணியை கையாண்டு கூட்டணியை திமுக தக்க வைக்கும் என்பதே பொதுவான கருத்து.

பாமகவின் நிலைப்பாடு

பாமகவின் நிலைப்பாடு

இன்னொரு பக்கம், பாஜக- அதிமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாதது போல் இருக்கும் பாமக இம்முறை அணி மாறலாம் என்கிற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆளும் திமுக அரசாங்கத்தை எதிர்க்கட்சி போல் கடுமையாக எதிர்க்காமல் மென்மையான அணுகுமுறையையே பாமக கடைபிடிக்கிறது; சட்டசபையிலும் பொது நிகழ்வுகளிலும் திமுகவுடன் இணக்கமான சூழ்நிலையையே பாமக வெளிப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற போது அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் பாமக மூத்த தலைவர் ஜிகே மணி பங்கேற்றார் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கத்து. பாமகவைப் பொறுத்தவரை சட்டசபை தேர்தலில் கவுரமாக சில தொகுதிகளில் வென்றதைப் போல லோக்சபா தேர்தலிலும் வெல்ல நினைக்கிறது. அதற்கு திமுக கூட்டணிதான் சரியான சாய்ஸ் என தைலாபுரம் தோட்டம் கருதுகிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

திமுக அணியில் மநீம?

திமுக அணியில் மநீம?

பாமகவைப் போல நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக அரசாங்கத்துடன் இணக்கமாக இருந்து வருகிறது. திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள், போராட்டங்கள் எதனையும் மக்கள் நீதி மய்யம் மேற்கொள்ளவும் இல்லை. திமுக அரசுக்கும் திமுக தலைமைக்கும் நெருக்கத்தைதான் மக்கள் நீதி மய்யமும் அதன் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் வெளிப்படுத்தி வருகிறார். சட்டசபை தேர்தலில் கணக்கை தொடங்காத மக்கள் நீதி மய்யம், லோக்சபா தேர்தலிலாவது முட்டி மோதவே பார்க்கும். இதற்கு வலிமையான திமுக கூட்டணிதான் சரியான இடம் என கணக்குப் போட்டிருக்கிறதாம் மநீம.

மநீம இன்று ஆலோசனை

மநீம இன்று ஆலோசனை

ஏற்கனவே கமல்ஹாசன் கூட்டிய மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் மீண்டும் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை அண்ணாநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+