கொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு செம ஷாக்... மாலை முரசு கருத்துக்கணிப்பு
சென்னை: அதிமுக மிகவும் வலுவாக இருப்பதாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
மாலை முரசு தொலைக்காட்சி தினசரி 26 தொகுதிகள் என்ற வீதத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிவித்து வருகிறது. இன்று கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு மண்டலத்திலுள்ள மாவட்டங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதிமுக வெற்றியை தடுக்கும் தோப்பு வெங்கடாசலம்
இதில் அதிமுக வலுவாக இருக்கும் பெருந்துறை தொகுதியில் திமுக 40% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு சர்வே தெரிவித்துள்ளது. அதிமுக 35% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காததால் தனித்துக் களமிறங்கும் தோப்பு வெங்கடாசலம் அதிமுக வாக்குகளை பிரிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கேயம் தொகுதியில் திமுக 43% வாக்குகளை பெறும். அதிமுக 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் மற்றும் அமமுக தலா 4%, மக்கள் நீதி மய்யம் 3 % வாக்குகளை பெறும்.

ஈரோட்டில் திமுக ஆதிக்கம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக 49% வாக்குகளை பெறும். பாஜக 38% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா 45% வாக்குகளை பெறுவார். அதிமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். ஈரோடு மேற்கு தொகுதியில் இழுபறி நிலவுகிறது. ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 43% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் தலா 5%, அமமுக 2% வாக்குகளை பெறும்.

அதிமுக முன்னிலை
திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக 44% வாக்குகளை பெறும். திமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். பரமத்திவேலூர் தொகுதியில் அதிமுக 45% வாக்குகளை பெறும். திமுக 43% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாமக்கல் தொகுதியில் அதிமுக 44% வாக்குகளை பெறும். திமுக 40% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும்.

கொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலை
இன்று மொத்தம் 26 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது மாலை முரசு. அதில் திமுக கூட்டணி 13 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 7 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை என்ன நிலை
மாலை முரசு இதுவரை 130 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் திமுக கூட்டணி 83 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 29 தொகுதிகளிலும் வெல்லும் . அதேபோல அமமுக கூட்டணி ஒரு தொகுதியில் வெல்லும். 17 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக மாலை முரசு தொலைக்காட்சியில் வெளியான கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications