இண்டர்நேசனல் அளவுக்கு போன விஜய்! வாழ்த்து சொன்ன மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்! கொண்டாடும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கு வெளிநாட்டு தலைவர்களிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹீம் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முழுமையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

Vijay Malaysia Anwar Ibrahim

புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, சட்டப்பேரவையின் நிரந்தர தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.

இந்த சூழலில்தான் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், " தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என் நண்பர் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக, ஊழல் அரசியல்வாதிகளையும் பல்வேறு வில்லன்களையும் மூன்று மணி நேரத்திற்குள் வீழ்த்தும் கதாநாயகனாக விஜயை அவரது ரசிகர்கள் திரையில் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால், இப்போது தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு சினிமாவை விட மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

Vijay Malaysia Anwar Ibrahim

"ஒரு விரல் புரட்சி" தற்போது வரலாறு படைக்கும் தருவாயில் உள்ளது. மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பல தலைமுறைகளாக வரலாறு, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான நெருங்கிய உறவுகள் உள்ளன. எதிர்கால ஆண்டுகளில் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றும் மலேசிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமரின் இந்த வாழ்த்து செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விஜய் ஆதரவாளர்கள் இந்த பதிவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+