தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் பிரேக்பாஸ்ட்! காங்கிரஸ் புள்ளிகளுடன் கார்கே நடத்திய டிஸ்கஷன்!
தமிழக காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுடன் ஆலோசனை நடத்திய கார்கே.
சென்னை: சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுக்கொண்டே தமிழக காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுடன் டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார் மல்லிகார்ஜுனே கார்கே.
நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி, ஓட்டு வங்கி, கட்சியின் அமைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இந்த டிஸ்கஷன் நடந்திருக்கிறது.
இதில் கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

சென்னையில் கார்கே
திமுக தலைமை கழகத்தின் சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சரை வாழ்த்திப் பேசுவதற்காக சென்னை வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் தான் தங்கியிருக்கிறார்.

பிரேக் பாஸ்ட்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியப் புள்ளிகளுக்கு காலை பிரேக் பாஸ்ட் விருந்து கொடுத்த அவர், நிர்வாகிகளுடம் பேசிக்கொண்டே ஆற அமர காலை டிபனை முடித்தார். நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி, ஓட்டு வங்கி, கட்சியின் அமைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் இருந்திருக்கின்றன. அதேபோல் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் கார்கேவுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.

இட்லி -பூரி -மெதுவடை
இட்லி, பூரி, மெதுவடையை விரும்பி சாப்பிட்ட மல்லிகார்ஜுனே கார்கே காலை டிபனை முடிப்பதற்குள் பல முக்கிய விவகாரங்களை எல்லாம் பேசி முடித்துவிட்டார். இதேபோல் இன்று மதியம் சமூக செயற்பாட்டாளர்களை மல்லிகார்ஜுனே சந்தித்து பேசியிருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரான பிறகு தமிழ்நாட்டுக்கு முதல் முறை வந்திருப்பதால் நிர்வாகிகளை சந்திப்பதற்காக சென்னையில் ஒரு நாள் முகாமிட்டிருக்கிறார்.

யார் யார் பங்கேற்பு
கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் போது கார்கேவை கடுமையாக எதிர்த்து சசிதரூரை ஆதரித்த கார்த்தி சிதம்பரம் இன்றைய விருந்தின் போது கார்கே அருகே முதல் ஆளாக அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications