146-வது தந்தை பெரியார் பிறந்த நாள்: "பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்"- கனிமொழி
சென்னை: 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். கனிமொழி எம்பி தமது வாழ்த்துச் செய்தியில் பள்ளிக் கூடங்கள் பகுத்தறிவு கற்றுத் தரட்டும் என தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமது எக்ஸ் பக்கத்தில், கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுதான் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் என்றார் தந்தை பெரியார். மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி, சமத்துவத்துக்காக போராடிய தந்தை பெரியாரைப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் பக்கத்தில், "It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform"-Constitution of India
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்
என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: ஈராயிரம் ஆண்டு மடமைக்கு எதிரான ஈரோட்டுப் பூகம்பம் - பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த நாள் இன்று. பழமை சிந்தனைகளால் பாதுகாக்கப்பட்ட அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவு கொண்டு சுட்டெரித்த சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார் இன்றைக்கும், என்றைக்கும் நம் தமிழ்நாட்டின் அடையாளம்.

உடலால் மறைந்தாலும்; என்றும் மறையாத - எக்காலமும் பொருந்துகிற திராவிடத் தத்துவமாய் நம்மோடு வாழ்கின்ற பெரியாரின் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும் - ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம். சமூகநீதி நாள் போற்றுவோம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications