Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.எஸ்.அழகிரியின் பதவிக்கு ஆபத்து? தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிக்கும் கார்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் மாற்றம் செய்ய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய தலைவராக யாரை நியமிக்கலாம் என மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்டியல் கேட்டிருப்பதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Mallikarjun Kharge to appoint new president of Tamil Nadu Congress Committee

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கடந்த ஆண்டு கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கடந்த ஆண்டு இறுதியில் டெல்லிக்கே சென்று அழகிரியை மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலடியாக கேஎஸ் அழகிரி தரப்பினரும், அழகிரியை மாற்றக்கூடாது என்று கூறி செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர்.

கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சி 2019 லோக்சபா தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வகையில் வெற்றியைப் பெற்றதால், அவர் மீது காங்கிரஸ் தலைமை நல்ல அபிப்ராயத்தையே வைத்திருக்கிறது. எனினும், தமிழ்நாட்டில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாலும், கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் முடிந்து விட்டதாலும் அவரை மாற்ற தலைமை முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

Mallikarjun Kharge to appoint new president of Tamil Nadu Congress Committee

தமிழகம் மட்டுமல்லாது விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களிலும் கட்சியின் மாநிலத் தலைவரை மாற்ற டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருப்பதால் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கியுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது, வாக்கு சாவடி முகவர்களை தயார் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதே போல இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. மெகா கூட்டணி அமைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் பாஜக அல்லாத காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி கட்சி தலைவர்களும் மாநில கட்சி தலைவர்களும் பேச உள்ளனர்.

இந்தநிலையில் பாஜகவிற்கு எதிரான வியூகம் வகுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில தலைவர்களை களப்பணி தீவிரம் காட்ட காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநில தலைவராக கேஎஸ் அழகிரி நியமிக்கப்பட்டார். இவர் தலைமையின் கீழ் எதிர்கொண்ட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியாகவே அமைந்தது. இதனையடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி வசமாகியது. இருந்த போதும் உட்கட்சி பிரச்சனையால் எந்த வித முன்னேற்ற நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார்.

எனவே இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் கேஎஸ் அழகிரியை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக தலைவர் பதவியை கைப்பற்ற மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணி, விஜயதாரணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலரும் முட்டி மோதி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட சிலரிடம் அடுத்த தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று ஆலோசனை கேட்டிருக்கிறாராம். அவர்கள் அளித்த பட்டியலின் அடிப்படையில் விரைவில் கே.எஸ். அழகிரியை மாற்றி விட்டு புதிய தலைவரை துடிப்பான இளைய தலைமுறை தலைவரை நியமனம் செய்ய உள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+